பிக்பாஸ் சீசன் 7 எப்போது துவங்கும்?

பிக்பாஸ் சீசன் 7 எப்போது துவங்கும்?
X
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் சீசன் 7 விரைவில் துவங்க இருக்கிறது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருக்கிறார். இது என்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தமிழில் மிகப் பெரிய டிஆர்பி பெறும் ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ்தான். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது முக்கிய காரணமாக இருந்தாலும் அதையும் தவிர சில காரணங்களும் உண்டு.

இதுவரை 6 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 7வது சீசனில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே துவங்கிவிட்டது. முதல் சீசனிலிருந்து 6வது சீசன் வரை அனைத்து வகை போட்டியாளர்களையும் எடை போட்டு வைத்திருக்கும் பொதுமக்களுக்கு இந்த முறை எப்படி மாற்றங்களைச் செய்ய போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமீபத்தில் வெளியான பிக்பாஸ் புரோமோவில் கமல்ஹாசன் இரண்டாக தோன்றினார். இதனால் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டு வந்த தகவல் உண்மை என தோன்றியது. அதைப் போலவே கமல்ஹாசனும் இப்போது அறிவித்துவிட்டார் இம்முறை 2 வீடுகளில் என்னன்ன கூத்துகள் நடக்க போகிறதோ என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 2023 விஜய் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த சீசனில் சீசனில் மொத்தம் 30 போட்டியாளர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் பிரபலங்கள், தொழில்முறைகள் மற்றும் பொதுமக்கள் அடங்குவர். போட்டியாளர்கள் இரண்டு வீடுகளில் தனித்தனியே தனிமைப்படுத்தப்படுவார்கள், அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வார்கள் மற்றும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வார்கள்.

போட்டியாளர்கள் வாராந்திர வாக்கெடுப்பில் போட்டியிடுவார்கள். வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். கடைசியில், ஒரு போட்டியாளர் வெற்றிபெறுவார் மற்றும் பரிசுத் தொகையைப் பெறுவார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு