அவன் என் மாமனா மச்சானா? கொந்தளித்த மாயா..!

அவன் என் மாமனா மச்சானா? கொந்தளித்த மாயா..!
X
பிக்பாஸ் சீசன் 7 எபிசோட் 3ல் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம். புரோமோ 1

மாயாவுக்கும் விஷ்ணுவுக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது. இறுதியில் விசித்ரா விஷ்ணுவை எச்சரிக்கிறார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் மூன்றாவது நாளில் அதிரடியாக சில சண்டைகள், வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பிக்பாஸ் சீசன் 7 முதல் வாரத்திலேயே பிரமாதமாக சண்டைக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார் பிக்பாஸ். அதே நேரம் கலகலப்பாக செல்லும் வகையில் சில டாஸ்களுக்காக கேமைத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இப்போது துவங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல்நாளான அறிமுகநாளில் கமல்ஹாசன் அனைவரையும் உள்ளே அனுப்பி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார். இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு பல போட்டிகளை வைத்து சோதிப்பார். வழக்கமான நடைமுறை இதுவாக இருந்தாலும் இப்போது வீட்டில் நுழைந்தவுடனேயே போட்டி தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7ல் பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 9 ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.

கடைசியாக வந்த விஜய் வர்மாவுக்கு இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவி கிடைத்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புரோமோவில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. தலைவர் விஜய் வர்மாவை அதிகம் கவராத 6 போட்டியாளர்களை இரண்டாவது வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பிக்பாஸின் இந்த அதிரடி முடிவு முதல்நாளே பலரையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. என்றாலும் அவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்து மற்ற விதிகளும் போடப்படும் என்று கூறப்படுகிறது.

  • ஐஸு
  • நிக்ஷன்
  • பவா செல்லதுரை
  • அனன்யா
  • வினுஷா
  • ரவீனா

இந்த ஆறு பேரும்தான் இன்னொரு வீட்டுக்கு அனுப்பபடுகிறார்கள். இதில் முக்கியமான ஒரு விதி என்னவென்றால் அவர்கள் 6 பேருக்கும் பிக்பாஸின் உதவி இருக்காது. அவர்களுக்கு குட்டி பாஸ் ஒருத்தர் இருக்கிறார். இதனால் என்ன நடக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. ஒரு வீட்டில் 6 பேர், இன்னொரு வீட்டில் 12பேர் என பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து பிக்பாஸை தொடங்கியுள்ளார் பிக்பாஸ்.

முதல் கேம்

பிக்பாஸின் முதல் கேம் இப்போது விளையாடப்படுகிறது. Know Your HouseMate எனும் பெயரில் இந்த டாஸ்க் நடக்கிறது. இதில் போட்டியாளர்கள் தலா ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் அவர்கள் குறித்த 6 தகவல்கள் போர்டில் எழுதப்பட்டிருக்கும். அதில் சில மட்டுமே சரியானதாக இருக்கும். அது கிசுகிசுக்கள் மட்டுமே அதை சரியாக கண்டுபிடித்து கற்பனை கலந்து கதை சொல்ல வேண்டும்.

அதன்படி மணிசந்திரா குறித்த கதையில், அவருடைய எக்ஸ் கேர்ள் ஃபிரண்டும், காதலியும் பர்த்டே பார்ட்டிக்கு வந்ததாகவும் அதன் பிறகு சில சம்பவங்கள் நடந்ததாகவும் கதை கூறுகின்றனர். செம்ம ஃபன்னாக செல்கிறது இந்த நிகழ்ச்சி.

முதல் புரோமோ

இன்று வெளியான முதல் புரோமோவில் Know Your HouseMate விளையாட்டு தொடர்ந்து விளையாடப்படுகிறது. அதில் மாயா கிருஷ்ணன் முதலில் பேசுகிறார். அவர் தான் கமல்ஹாசன் சாருடன் நடித்திருக்கிறேன் என்று கூறுகிறார். கையில் 495K என எழுதப்பட்டுள்ள சிலேட் ஒன்றைப் பிடித்திருக்கிறார்.

மறுபுறம் விஷ்ணு சில கேள்விகளை அடுக்கி வைக்கிறார். அவருக்கு மாயாவுக்கும் போட்டி என்பதை குறிக்கும் வகையில் மாயா Vs விஷ்ணு என போட்டி ஆரம்பமாகிறது. படு சூடாக விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது பிரதீப் குறித்த பேச்சு எழவே, மாயா அவன் என்ன என் மாமனா மச்சானா என கொந்தளித்து பேச ஆரம்பிக்கிறார்.

கடைசியாக விசித்ரா, விஷ்ணுவிடம் எச்சரிக்கை விடுக்கிறார். இந்தமுறை நிறையபேரின் பர்சனல் விசயங்களை விஷ்ணு பேசியதாக அவர் கூறுகிறார். இப்படி முதல் புரோமோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!