ஆரம்பமே அமர்க்களம்..! முதல் வாரத்திலேயே 2 எலிமினேசனா?

ஆரம்பமே அமர்க்களம்..! முதல் வாரத்திலேயே 2 எலிமினேசனா?
X
பிக்பாஸ் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே 2 எலிமினேசன் இருக்கிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் முதல் நாளே அதிரடியாக முடிவுகள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. அதாவது 6 பேரை வேறொரு வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் பிக்பாஸ்.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இப்போது துவங்கியுள்ளது. நேற்று முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல்நாளான அறிமுகநாளில் கமல்ஹாசன் அனைவரையும் உள்ளே அனுப்பி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார். இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு பல போட்டிகளை வைத்து சோதிப்பார். வழக்கமான நடைமுறை இதுவாக இருந்தாலும் இப்போது வீட்டில் நுழைந்தவுடனேயே போட்டி தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7ல் பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 9 ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.

முதல் ஆளாக நுழைந்த கூல் சுரேஷ், அவருக்கு அடுத்து நுழைந்த பூர்ணிமா ரவியிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரவீனா தாஹாவுக்கு பொறுப்பு கைமாறியது. அடுத்து வந்த போட்டியாளருடன் ஏற்கனவே இருக்கும் வீட்டுத் தலைவர் விவாதித்த தான் ஏன் சிறந்த தலைவராக இருக்க முடியும் என்பதை நிரூபித்து கேப்டன் பொறுப்பை பெற வேண்டும் என்பது பிக்பாஸின் ஆணை.

ஒரு வேளை இரண்டு பேருமே விட்டுக்கொடுக்காமல் போராடினால் அது நேரம் முடிந்தவுடன் அடுத்து வரும் போட்டியாளருக்கு சென்றுவிடும். இப்படியாக ஒருவர் மாறி ஒருவர் வந்து கடைசியாக வந்த விஜய் வர்மாவுக்கு இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவி கிடைத்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புரோமோவில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

தலைவர் விஜய் வர்மாவை அதிகம் கவராத 6 போட்டியாளர்களை இரண்டாவது வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பிக்பாஸின் இந்த அதிரடி முடிவு முதல்நாளே பலரையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. என்றாலும் அவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்து மற்ற விதிகளும் போடப்படும் என்று கூறப்படுகிறது.

  • ஐஸு
  • நிக்ஷன்
  • பவா செல்லதுரை
  • அனன்யா
  • வினுஷா
  • ரவீனா

இந்த ஆறு பேரும்தான் இன்னொரு வீட்டுக்கு அனுப்பபடுகிறார்கள். இதில் முக்கியமான ஒரு விதி என்னவென்றால் அவர்கள் 6 பேருக்கும் பிக்பாஸின் உதவி இருக்காது. அவர்களுக்கு குட்டி பாஸ் ஒருத்தர் இருக்கிறார். இதனால் என்ன நடக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. ஒரு வீட்டில் 6 பேர், இன்னொரு வீட்டில் 12பேர் என பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து பிக்பாஸை தொடங்கியுள்ளார் பிக்பாஸ்.

எலிமினேசன்

பொதுவாக ஒரே வீட்டில் இருந்தால் நாமினேஷன் என இரண்டு பேரை நாமினேட் செய்யச் சொல்லி கேட்பார் பிக்பாஸ் இம்முறை இரண்டு வீடுகள் என்பதால் பெரிய வீட்டில் இருப்பவர்கள் சிறிய வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்யலாம். சிறிய வீட்டில் இருப்பவர்கள் பெரிய வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார் பிக்பாஸ்.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் ஐஸு, பவா செல்லதுரை, ரவீனா, அனன்யா ராவ் ஆகிய 4 பேரை நாமினேட் செய்து வைத்துள்ளனர். ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா ஆகி 3 பேரை நாமினேட் செய்துள்ளனர். இவர்கள் 7 பேரில் யார் இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள இப்போதே ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இப்போது சந்தேகம் என்னவென்றால் இரண்டு வீடுகள் என்பதால் இரண்டு பேரை எலிமினேட் செய்வார்களா என்பதை பலரும் கேட்டு வருகின்றனர். இதனால் இந்த வார இறுதி பிக்பாஸ் எபிசோட்கள் வரலாற்று சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!