ஓவியா, லாஸ்லியா, ஜனனி...! இந்த முறை யார் ? ரசிகர்கள் ஆர்வம்

ஓவியா, லாஸ்லியா, ஜனனி...! இந்த முறை யார் ? ரசிகர்கள் ஆர்வம்
X
ஓவியா, லாஸ்லியா, ஜனனி என அழகு பதுமைகளுக்கு ஆர்மிகள் மூலம் ரசிகர்கள் குவிந்தது போல் இந்த முறை யாருக்கு ரசிகர்கள் கூட்டம் ஆர்மி தொடங்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் விஜய் தொலைக்காட்சியில் வருடா வருடம் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ இந்த பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் காரணத்துக்காக இந்த நிகழ்ச்சி முதலில் பார்க்கப்பட்டு பின் அவரின் அரசியல், புத்தக அறிமுகம் பரிந்துரை உள்ளிட்ட காரணங்களால் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. இதனையும் தாண்டி பெரிய அளவிலான இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு காரணம் இதில் வரும் அழகு பதுமைகள்தான்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு வீட்டுக்குள் பல செலிபிரிட்டிகளை அடைத்து வைத்து அவர்களின் கோபம், தாபம், மகிழ்ச்சி, துன்பம், நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் என எடுத்துரைப்பதுதான் நிகழ்ச்சியின் நோக்கம்.இதன்மூலம் சமுதாயத்திலிருக்கும் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியாக அவர்களை பார்க்கலாம்.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. முதல் சீசனிலிருந்தே இந்நிகழ்ச்சியின் டிஆர்பி உச்சத்தில்தான் இருக்கும். தொலைக்காட்சியில் மட்டுமல்ல, ஓடிடியிலும் இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்து வருவார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பில் கமல்ஹாசன் ரெட்டை வேடத்தில் வந்து கலக்கினார்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த முறை யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த ரகசியம் மெல்ல மெல்ல கசிந்து வருகிறது.

கமல் பட நாயகி


பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு அதிகம் பரபரப்பை ஏற்படுத்தப்போவது நிச்சயமாக இந்த நடிகைதான் என்கிறார்கள். இவர் கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பிரசாந்த், விஷாலுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். மும்தாஜ், நமீதா ஆகியோரின் இடத்தை நிரப்ப இவரை அழைத்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமல்ல பிரபல நாயகி கிரண் ரத்தோட் தான்.

முன்னாள் கதாநாயகன்

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் முன்னாள் கனவு நாயகன் அப்பாஸ் பங்கேற்க இருக்கிறாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பெரிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இவர் மட்டுமின்றி தற்போது இளம் பெண்களை ஏங்க வைக்கும் நாயகன் சந்தோஷ் பிரதாப்பும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார் என தகவல் வந்த வண்ணம் இருக்கிறது.


இவர்கள் தவிர பிக்பாஸ் ஏழாவது சீசனில் கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, நடிகை அம்மு அபிராமி, தர்ஷா குப்தா, வி.ஜே.ரக்‌ஷன், ஜாக்குலின், காக்கா முட்டையில் நடித்த விக்னேஷ், நடன அமைப்பாளர் ஸ்ரீதர், மாடல்கள் ரவிக்குமார், நிலா, நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை சோனியா அகர்வால், விஜே பார்வதி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

ஓவியா, லாஸ்லியா, ஜனனி வரிசையில்....


ஓவியா, லாஸ்லியா, ஜனனி ஆகியோர் அந்தந்த சீசன்களில் மிகப் பெரிய ரசிக பட்டாளத்தை தங்களது ஆர்மியில் சேர்த்திருந்தனர். அதாவது அவர்களுக்கு தெரியாமலே இங்கு மிகப் பெரிய கூட்டம் ரசிக பட்டாளம் உருவாக்கி ஆதரவு திரட்டி வந்தது. அந்த வகையில் இந்த சீசனில் எந்த பெண் இடம் பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இரண்டு வீடுகளில் நடக்கும் புதிய சீசன் ரசிகர்களுக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு