முதல் எலிமினேசன் இவரா? அடடே ! இன்னும் கேமே ஸ்டார்ட் ஆகலையே!

முதல் எலிமினேசன் இவரா? அடடே ! இன்னும் கேமே ஸ்டார்ட் ஆகலையே!
X
இன்னும் கேமே ஸ்டார்ட் ஆகாத நிலையில் முதல் எலிமினேசனாக பெண் ஒருவர் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 7ன் முதல் எலிமினேசன் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதுவும் ஒரு பெண் என்பதால், கடைசி நேரத்தில் உட்டாலங்கடி வேலை பார்த்து பிக்பாஸ் எதையாவது மாற்றுவாரா என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் பறந்து வருகின்றன.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி அதிக டிஆர்பி பெறும் தொலைக்காட்சி விஜய் டிவிதான். அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டால் தொடர்ந்து 100 நாட்களுக்கு டிஆர்பி எகிறும். டிவி மட்டுமின்றி ஓடிடியிலும் ஒளிபரப்பாவதால் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். இதோ சீசன் 7 கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் சீசன் 7

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் முதல் நாளே அதிரடியாக சில சண்டைகள், வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பிக்பாஸ் சீசன் 7 முதல் வாரத்திலேயே பிரமாதமாக சண்டைக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார் பிக்பாஸ். அதே நேரம் கலகலப்பாக செல்லும் வகையில் சில டாஸ்களுக்காக கேமைத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இப்போது துவங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

கமல்ஹாசன் வாழ்த்து

முதல்நாளான அறிமுகநாளில் கமல்ஹாசன் அனைவரையும் உள்ளே அனுப்பி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார். இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு பல போட்டிகளை வைத்து சோதிப்பார். வழக்கமான நடைமுறை இதுவாக இருந்தாலும் இப்போது வீட்டில் நுழைந்தவுடனேயே போட்டி தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7ல் பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 9 ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.

இரண்டாவது வீடு

கடைசியாக வந்த விஜய் வர்மாவுக்கு இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவி கிடைத்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புரோமோவில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. தலைவர் விஜய் வர்மாவை அதிகம் கவராத 6 போட்டியாளர்களை இரண்டாவது வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பிக்பாஸின் இந்த அதிரடி முடிவு முதல்நாளே பலரையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. என்றாலும் அவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்து மற்ற விதிகளும் போடப்படும் என்று கூறப்படுகிறது.

எலிமினேசன் யார்?

பவா செல்லத்துரை, ஐஷு, அனன்யா ராவ், ரவீனா தா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி மற்றும் ஜோவிகா விஜயகுமார் ஆகியோர்தான் இந்த வார எலிமினேசன் கேட்டகரிக்கு நாமினேசன் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் உங்களுக்கு பிடித்தவர்களை காப்பாற்ற ஓட்டு போடக் கேட்டுக்கொண்டுள்ளார் பிக்பாஸ். இந்நிலையில் இப்போதைய நிலவரப்படி இரண்டு பேர் மிகக்குறைவான வாக்குகளைப் பெற்று எலிமினேட் ஆகும் நிலையில் இருக்கிறார்கள்.

அதில் ஒருவர் யுகேந்திரன் மற்றொருவர் அனன்யா. இவர்கள் இருவருக்கும் ஓட்டுகள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. அதிலும் அனன்யாவுக்கு மிகவும் குறைவான ஓட்டுக்களே கிடைத்துள்ளன.

சம்பளம் தெரியுமா?

கதை சொல்லியும் எழுத்தாளருமான பவா செல்லதுரைக்கு ஒரு நாளைக்கு 28ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

நடிகை விசித்ரா, பாடகர் யுகேந்திரன் ஆகியோருக்கு ரூபாய் 27ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார் என்கிறார்கள். சீரியல் நடிகர் விஷ்ணுவுக்கு ஒரு நாளைக்கு 25ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரதீப் ஆண்டனி மற்றும் பாரதி கண்ணம்மா தொடர் நடிகை வினுஷா ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை நடிகரும் சினிமா பிரபலமும் ஆன கூல் சுரேஷ், விக்ரம் பட நடிகை மாயா கிருஷ்ணன், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் சரவண விக்ரம், குக் வித் கோமாளி மூலம் பிரபலமான ரவீணா தஹா மற்றும் நடன கலைஞர் மணி சந்திரா ஆகியோருக்கு ஒரு நாளைக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. யூடியூப் பிரபலமும் நடிகையுமான பூர்ணிமா ரவி, லவ் டுடே பட நடிகை அக்‌ஷயா உதயகுமார் மற்றும் டான்சர் விஜய் வர்மா ஆகியோருக்கு தலா 15ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது என்கிறார்கள்.

நடன கலைஞர் ஐஷுவிற்கு ஒரு நாளைக்கு 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது.

பாடலாசிரியரும் ராப் பாடகருமான நிக்ஸன் மற்றும் வனிதாவின் மகள் ஜோவிகா இருவருக்கும் ஒரு நாளைக்கு 13 ஆயிரம் ரூபாய் சம்பளமாம்.

அனன்யாவிற்கு 12ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil