பிக்பாஸில் அதிக சம்பளம் வாங்குவது இந்த போட்டியாளர்தானாம்..!

பிக்பாஸில் அதிக சம்பளம் வாங்குவது இந்த போட்டியாளர்தானாம்..!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் அதிக சம்பளம் வாங்கும் நபர் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன.

பிக்பாஸ் சீசன் 7ல் அதிக சம்பளம் வாங்கும் நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒவ்வொருவரும் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் எனும் தகவலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி அதிக டிஆர்பி பெறும் தொலைக்காட்சி விஜய் டிவிதான். அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டால் தொடர்ந்து 100 நாட்களுக்கு டிஆர்பி எகிறும். டிவி மட்டுமின்றி ஓடிடியிலும் ஒளிபரப்பாவதால் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். இதோ சீசன் 7 கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் சீசன் 7

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் முதல் நாளே அதிரடியாக சில சண்டைகள், வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பிக்பாஸ் சீசன் 7 முதல் வாரத்திலேயே பிரமாதமாக சண்டைக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார் பிக்பாஸ். அதே நேரம் கலகலப்பாக செல்லும் வகையில் சில டாஸ்களுக்காக கேமைத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இப்போது துவங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

கமல்ஹாசன் வாழ்த்து

முதல்நாளான அறிமுகநாளில் கமல்ஹாசன் அனைவரையும் உள்ளே அனுப்பி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார். இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு பல போட்டிகளை வைத்து சோதிப்பார். வழக்கமான நடைமுறை இதுவாக இருந்தாலும் இப்போது வீட்டில் நுழைந்தவுடனேயே போட்டி தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7ல் பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 9 ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.

இரண்டாவது வீடு


கடைசியாக வந்த விஜய் வர்மாவுக்கு இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவி கிடைத்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புரோமோவில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. தலைவர் விஜய் வர்மாவை அதிகம் கவராத 6 போட்டியாளர்களை இரண்டாவது வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பிக்பாஸின் இந்த அதிரடி முடிவு முதல்நாளே பலரையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. என்றாலும் அவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்து மற்ற விதிகளும் போடப்படும் என்று கூறப்படுகிறது.


சம்பளம் தெரியுமா?


கூல் சுரேஷ்:

துணை நடிகரும் சினிமா பிரபலமும் ஆன கூல் சுரேஷிற்கு ஒரு நாளைக்கு 18ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

பூர்ணிமா ரவி:

யூடியூப் பிரபலமும் நடிகையுமான பூர்ணிமா ரவிக்கு 15ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது என்கிறார்கள்

ரவீணா தஹா:

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான ரவீணா தஹா பெறும் சம்பளம் ஒரு நாளைக்கு 18ஆயிரம் ரூபாயாம்.

பிரதீப் ஆண்டனி:

நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 20ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிக்ஸன்:

பாடலாசிரியரும் ராப் பாடகருமான நிக்ஸனுக்கு ஒரு நாளைக்கு 13 ஆயிரம் ரூபாய் சம்பளமாம்.

வினுஷா தேவி:

பாரதி கண்ணம்மா தொடர் நடிகை வினுஷாவிற்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறதாம்.

மணி சந்திரா:

நடன கலைஞர் மணி சந்திராவிற்கு ரூபாய் 18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது என்கிறார்கள்.

அக்‌ஷயா உதயகுமார்:

லவ் டுடே பட நடிகை அக்‌ஷயா உதயகுமாருக்கு ரூபாய் 15 ஆயிரம் சம்பளம் என கூறப்படுகிறது.

ஜோவிகா:

வனிதாவின் மகள் ஜோவிகாவிற்கு ஒரு நாளைக்கு 13 ஆயிரம் ரூபாய் சம்பளமாம்.

ஐஷு:

நடன கலைஞர் ஐஷுவிற்கு ஒரு நாளைக்கு 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது.

மாயா கிருஷ்ணன்:

விக்ரம் பட நடிகை மாயா கிருஷ்ணன் பெறும் சம்பளம் ஒரு நாளைக்கு 18ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

சரவண விக்ரம்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் சரவண விக்ரம், ஒரு நாளைக்கு 18ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறாராம்.

பாடகர் யுகேந்திரன்:

பாடகர் யுகேந்திரனிற்கு ரூபாய் 27ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார் என்கிறார்கள்.

விசித்ரா:

நடிகை விசித்ராவிற்கு 27ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

அனன்யா:

அனன்யாவிற்கு 12ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

விஷ்ணு:

சீரியல் நடிகர் விஷ்ணுவுக்கு ஒரு நாளைக்கு 25ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பவா செல்லதுரை:

கதை சொல்லியும் எழுத்தாளருமான பவா செல்லதுரைக்கு ஒரு நாளைக்கு 28ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

விஜய் வர்மா:

விஜய் வர்மாவிற்கு ரூபாய் 15ஆயிரம் சம்பளமாக பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!