கோலாகலமாக துவங்கும் பிக்பாஸ் 7 ! இவங்களும் உள்ள போறாங்களாம்!

கோலாகலமாக துவங்கும் பிக்பாஸ் 7 ! இவங்களும் உள்ள போறாங்களாம்!
X
பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் பெயர்களும் புகைப்படங்களும் இதோ!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்ட விஜய் தொலைக்காட்சி, கடந்த வாரமே கவுன்டவுனையும் தொடங்கிவிட்டனர். நாளை மிகப் பிரம்மாண்டமாக துவக்க விழா ஒளிபரப்பாகிறது. அதற்கான ஷூட்டிங் இன்று அதிகாலையிலேயே எடுக்கப்பட்டுவிட்டது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ இந்த பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு வீட்டுக்குள் பல செலிபிரிட்டிகளை அடைத்து வைத்து அவர்களுக்குள் கலகம் மூட்டி அதனைக் கொண்டு சுவாரஸ்யமாக்கி ஒளிபரப்புகிறார்கள். இதன் மூலம் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி நிகழ்ச்சியை அனைவரையும் பார்க்கும் வகையில் பேக் செய்து கொடுக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. முதல் சீசனிலிருந்தே இந்நிகழ்ச்சியின் டிஆர்பி உச்சத்தில்தான் இருக்கும். தொலைக்காட்சியில் மட்டுமல்ல, ஓடிடியிலும் இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்து வருவார்கள்.

பிக்பாஸ் 7: இரண்டு வீடுகளில்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பில் கமல்ஹாசன் ரெட்டை வேடத்தில் வந்து கலக்கினார். பிக்பாஸ் புரோமோவே வேற லெவலுக்கு ரீச் ஆனது. கமல்ஹாசனின் நடிப்பு திறனை ஒரு டிவி தொடரின் விளம்பரம்தானே என அவர் நிறுத்தவில்லை.

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த முறை யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த ரகசியம் மெல்ல மெல்ல கசிந்து வருகிறது.

மாடல் அழகி அனன்யா ராவ்

பாரதி கண்ணம்மா விணுஷா தேவி

நடிகை விசித்ரா

பாடகர் யுகேந்திரன்

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா

டான்சர் மணிச்சந்திரா

நடிகர் விஷ்ணு விஜய்

நடிகை தர்ஷா குப்தா

நடிகர் பப்லு பிரித்திவிராஜ்

நடிகை ரவீனா

VJ அர்ச்சனா


டான்சர் விஜய் வர்மா


விஜய் டிவி புகழ் சரத்


சுழல் வெப் சீரிஸ் நடிகர் ஜான்சன்


நடிகை உமா ரியாஸ் கான்


நடிகை மூன் நூல் நிலா


நடிகர் சரவணன் விக்ரம்


இந்திரஜா ரோபோ சங்கர்


நடிகர் பால சரவணன்


நடிகர் சத்யா


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இரண்டு வீடுகளில் நடக்கும் புதிய சீசன் ரசிகர்களுக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது துவங்கும்?

அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் தொடங்கும் இந்த நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு துவங்கும். திங்கள் முதல் ஞாயிறு வரை தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு