அசீம் காட்டிய கோபமே, நட்பை இழக்க காரணம்; சக போட்டியாளர்கள் 'ஓபன்டாக்'

அசீம் காட்டிய கோபமே, நட்பை இழக்க காரணம்; சக போட்டியாளர்கள் ஓபன்டாக்
X

18th January 2023 Promo 1- பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர் அசீம்.

18th January 2023 Promo 1 - பிக்பாஸ் வீட்டுக்குள் அசீம் உடன், சக போட்டியாளர்கள் நட்பு கொள்ளாததற்கு, அவரது கோபமே காரணம் என, வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

Bigg Boss Tamil Season 6, 18th January 2023 Promo 1 - பிக்பாஸ் வீட்டில், அசீம் மற்ற போட்டியாளர்களிடம் காட்டிய கோபமே, அவரிடம் நட்பு கொள்ள தடையாக இருந்ததாக, சக போட்டியாளர்கள், வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவியில், நூறு நாட்களை கடந்து, பிக்பாஸ் சீசன் 6 சென்று கொண்டிருக்கிறது. அசீம், விக்கிரமன், ஷிவின், மைனா, அமுதவாணன், கதிரவன் என ஆறு பேர் மட்டுமே இருந்த நிலையில், பணப்பெட்டி டாஸ்க்கில், மூன்று லட்சம் ரூபாய் பணத்துடன், கதிரவன் வெளியேறி விட்டார். மற்ற ஐந்து பேர் மட்டுமே, தற்போது இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில், மூன்று பேர் இறுதி நாளில் வெளியேற்றப்பட்டு, மற்ற இருவர் வின்னர் - ரன்னர் ஆக அறிவிக்கப்பட உள்ளனர். இறுதி போட்டியில் அசீம் அல்லது விக்கிரமன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக, தகவல்கள் வந்துள்ளது.


இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வந்துள்ளனர். அதனால், பழையபடி பிக்பாஸ் வீடு, கலகலப்பாக மாறி இருக்கிறது. அதே போல் சண்டை சச்சரவும் குறையாமல், பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளார், ரக்சிதா, ஷெரீன், மணிகண்டன், ராம், தனலட்சுமி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டோர் வீட்டுக்குள் இருந்து வருகின்றனர். நேற்று, மகேஸ்வரிக்கும், மணிகண்டனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், நிகழ்ச்சியை பரபரப்பாக்கியது.


இந்நிலையில், இன்றைய ப்ரோமா வெளியாகி உள்ளது. இதில், ஜிபி முத்து முகத்தில் வெள்ளை மாவு பூசிய நிலையில் காணப்படுகிறார். லிவிங் ஏரியாவில் அனைவரும் சோபாவில் அமர்ந்திருக்க, அசீமிடம் பேசும் சக போட்டியாளர்கள், அவரது கோபமே, அவரிடம் நட்பு கொள்ளாமல் தடுத்து விட்டதாக, வெளிப்படையாக கூறுகின்றனர். அதற்கு பதில் சொல்லும் அசீம், கடந்த 2019ல் தனது திருமண வாழ்க்கை பிரேக்கப் ஆன போது, கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, கோர்ட்டுக்கு செல்ல தயக்கமாக இருந்ததால், என்னுடன் 18 ஆண்டுகள் பழகிய என் நெருங்கிய நண்பனை அழைத்தேன்.


என்னுடன் கோர்ட்டுக்கு வர மறுத்த அவன், என்னுடைய போன் அழைப்புகளையும் தவிர்க்க ஆரம்பித்தான். என்னுடன் பேசுவதையும் தவிர்த்தான். இந்த மோசமான அனுபவத்துக்கு பிறகு, யாருடனும் விரைவில், நட்பு கொள்ள எனக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டது. ஆனால், இதையும் இங்குள்ள சிலர்,நான் சேட்டர்ஜி ஆக செய்வதாக நினைத்துக் கொண்டனர். அது உண்மையல்ல. என்னுடைய திருமண வாழ்க்கை பிரேக்கப் ஆனதை போலவே, என் நட்பும் விலகி போனது என்னை அதிகளவில் பாதிப்படைய செய்தது, என்று நீண்ட விளக்கம் அளிக்கிறார். இதற்கு தனலட்சுமி சிரிக்க, ' இப்படி சிரிக்காதீங்க, என்னை காயப்படுத்தாதீங்க, என்கிறார் அசீம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!