பிக்பாஸ் தமிழ் 6' - இந்த வாரம் 2 எவிக்சன்ஸ்.. ஒரு வைல்ட் கார்டு எண்ட்ரி?
bigg boss this weak double evition - பிக்பாஸ் 6ல் இந்த வாரம் இருமுறை வெளியேற்றப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 6வது சீசன், இப்போது 60 நாட்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 21 பேர் பங்கேற்ற நிலையில், தற்போது அசீம், கதிரவன், விக்கிரமன், அமுதவாணன், ராம், மணிகண்டன், ஏடிகே, ஷிவின், ரக்சிதா, தனலட்சுமி, ஆயிஷா, மைனா நந்தினி, ஜனனி ஆகிய 13 பேர் மட்டுமே வீட்டுக்குள் உள்ளனர். எட்டு பேர் வெளியேறி விட்டனர். ஜிபி முத்து, தனது சொந்த விருப்பத்தின் பேரில் அவராகவே வெளியேறி விட்டார். சாந்தி, அசல் கோளார், ஷெரினா, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி ஆகியோரை தொடர்ந்து, கடந்த வாரம் குயின்ஸி வெளியேறினார்.
தற்போது அவர் அளித்த 'லைவ்' பேட்டி ஒன்றில், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் ஷிவன் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும் குயின்ஸி கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது நன்றாகவே இருந்தது. பிக்பாஸ் வீட்டில், 100 நாட்கள் வரை தாக்கு பிடித்து இருப்பதே பெரிய 'டாஸ்க்'தான். அப்படி பார்த்தால், 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து விட்டாலே, அதுவே பெரிய வெற்றிதான். என்னை பொருத்த வரை, இந்த முறை பிக்பாஸ் டைட்டில் வின்னராக வெற்றி பெற ஷிவினுக்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், அவரிடம் இயல்பாகவே பல நல்ல குணங்களும், நல்ல நடவடிக்கைகளும் உள்ளது.
அடுத்து அசீம், விக்ரமன், மணிகண்டன் போன்றவர்கள் சிறந்த போட்டியாளர்களாக உள்ளனர். அசீம், கோபத்தை குறைத்துக்கொண்டு விளையாடினால், அனைவருக்குமே அவரை பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
'பிக் பாஸ் தமிழ் 6' 60வது நாளை நெருங்கிவிட்ட நிலையில், போட்டியாளர்கள் டைட்டிலை வெல்வதற்காக தீவிரமாக விளையாடி வருகின்றனர். கடந்த வார இறுதியில், பார்வையாளர்களின் குறைந்த வாக்குகள் காரணமாக குயின்சி வெளியேற்றப்பட்டார். வரும் வாரத்தில் அடுத்த வரிசையில் யார் இருப்பார்கள் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது.
பிக்பாஸ் 6ல் இந்த வாரம் இருமுறை வெளியேற்றப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியேற்றப்படும் இருவரில் அசீம் ஒருவராக இருக்கலாம். ஆனால் ரகசிய அறையில் காத்திருக்க அனுப்பப்படலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.
'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரிக்கான நேரம் வந்துவிட்டது என்ற சலசலப்பும் நிலவுகிறது. முன்னதாக வி.ஜே. பார்வதி, நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ் மற்றும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் ஆகியோரிடம் வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இந்த பிரபலங்களில் ஒருவராக இருக்கப் போகிறாரா என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu