பிக் பாஸ் சீசன் 6: அமுதவாணனை திட்டிய மைனா. எதுக்கு இந்த சண்டை?

பிக் பாஸ் சீசன் 6: அமுதவாணனை திட்டிய மைனா. எதுக்கு இந்த சண்டை?
X
பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் மைனா நந்தினியும், அமுதவாணனும் சண்டை போடும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது .

இந்த வாரம் பிக் பாஸ் 6 போட்டியாளர்களை சொர்க்கவாசிகள், நரகவாசிகளாக இருக்கும் டாஸ்க் கொடுத்திருக்கிறார்கள். நரகவாசிகள் சொர்க்கவாசிகளாக முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக அவர்கள் சில டாஸ்குகளை செய்ய வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக சொர்க்கவாசிகளுக்கும், நரகவாசிகளுக்கும் இடையே சண்டையாக இருக்கிறது. இந்நிலையில் தான் அப்படி ஒரு சண்டை தொடர்பான ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

இதற்கு முன்பு ஜனனிக்கு செல்லோ டேப் ஓட்டும்போது கொஞ்சம் குறைவாகவே ஓட்டியுள்ளார் அமுதவாணன். ஆனால், மைனாவுக்கு முழுவதுமாக ஓட்டியுள்ளார், இதனால் அமுதவாணனை பிடிபிடி என பிடித்துவிட்டார் மைனா.

ப்ரமோவில் வெளியான விடியோவில் அமுதவாணனை பார்த்து மைனா, நேற்று வந்து எனக்கு செல்லோ டேப் ஒட்டும்போது தோளில் போட்டீங்க. மேலும் தொடையில் இருந்து கால் வரைக்கும் போட்டீங்க, கைக்கு போட்டீங்க. இப்போ ஏன் அதெல்லாம் போடவில்லை என்று கோபமாக கேட்டார். அதற்கு தோள்பட்டையில் டேப் போடவில்லை, கைக்கு தான் போட்டேன் என்று அமுதவாணன் பதில் அளித்தார்.


இப்போ ஏன் அவருக்கு போடவில்லை என்று மைனா நந்தினி கேட்க, அவருக்கு அதுவே போதும் என்று விட்டுவிட்டேன் என்று கூலாக பதில் அளித்தார் அமுதவாணன்.

இதனால் கோபமான மைனா, அதை எப்படி நீ முடிவு செய்வ என்று சீற, நான் முடிவு பண்ணுவேன் என அமுதவாணன் கூறினார்.

அதை கேட்டு மைனா நந்தினிக்கு மேலும் கோபம் வந்தது.

நான் முடிவு பண்ணுவேன் என அமுதவாணன் மீண்டும் கூற, தெரியுது, தெரியுது என மைனா பதில் அளிக்க அமுதவாணனுக்கு கோபம் வந்துவிட்டது. கை தட்டுவது, ஆக்சன் பண்ணுவது எல்லாம் வேண்டாம், நார்மலா பேசு என்றார் அமுதவாணன்.

கெளம்பு கெளம்பு என்று அமுதவாணனை விரட்டிவிட்டார் மைனா. பதிலுக்கு அவரோ, நீ கெளம்பு என்றார். அத்துடன் ப்ரொமோ வீடியோ முடிந்துவிட்டது.

அமுதவாணனும், ஜனனியும் நெருக்கமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஜனனிக்காக பாகுபாடு பார்த்து தற்போது ஹவுஸ்மேட்ஸிடம் சிக்கியிருக்கிறார். இதை தானே அமுதவாணன் செய்வது தவறு என்று நேற்று அசீமும் கேட்டார். அவரை திட்டினாங்களே என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சரி. பிக்பாஸ் வீட்டில் அடுத்த சண்டை ஆரம்பமாகி விட்டது. இந்த வாரம் யார் தலை தப்பிக்கப் போகுதுன்னு பாக்கலாம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!