பிக்பாஸ் சீசன்-6 - கமலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்..!
Bigg Boss Tamil -பல்வேறு மொழிகளில் தனியார் தொலைக்காட்சிகளில் ஏராளமான என்டர்டெயின்ட்மென்ட் நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுவதுண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவ்வகையில் தமிழில் தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வருகிற பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக இருந்து நடத்தி வருகிறார். இதுவரை பிக்பாஸ் சீசனின் ஐந்து நிகழ்ச்சிகள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன.
நடந்து முடிந்த ஐந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட வெற்றியாளர் மட்டுமின்றி போட்டியில் கலந்துகொண்ட அத்தனை பேருக்குமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்குப் பிறகு அவர்களின் வாழ்வில் பல்வேறு மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிகழ்ந்துள்ளதை அனைவரும் அறிவர். இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் ஆசையும் சின்னத்திரை பெரியதிரை மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு உண்டு.
இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீசன் - 6 நிகழ்ச்சியின் அடுத்தடுத்த புரோமோக்கள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு புரோமோவிலும் அடுத்தடுத்த அப்டேட்களை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பிலிருந்து அவர் இடைவெளி எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியின் முதன்மையான நிகழ்ச்சியான பிக்பாஸ் வரும் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இதன் 6வது சீசனைத் தொடங்கவுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த புரோமோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
'விக்ரம்-2' வெற்றியைத் தொடர்ந்து கமல், அடுத்தடுத்த படங்களைத் தயாரிக்கவும் நடிக்கவும் என பரபரப்பாக உள்ளார். அவரது நடிப்பில் உருவாகும் 'இந்தியன் - 2' படம் ஏற்கெனவே, தொடங்கி பிறகு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கி, கடந்த சில நாட்களாக சென்னை சாலிகிராமத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்தப் படப்பிடிப்பில், நடிகர் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். இதனிடையே ஷங்கர் இயக்கிவரும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஒருமாத காலம் கழித்தே திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பிக்பாஸ் சீசன் - 6 நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளார். வரும் 9-ம் தேதி இந்த நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாகத் தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஒளிபரப்பாக உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதேபோல பொதுமக்களில் ஒருவர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த நிகழ்ச்சி இன்னும் 3 நாட்களில் தொடங்கவுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்களும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில், நிகழவிருக்கும் 6-வது சீசனில் அதிரடியான பல மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்புத் தரப்பு தகவல் பகிர்ந்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu