பிக் பாஸ் சீசன் 6: கதறி அழுத ஜனனி; ஷாக்கான ரசிகர்கள்

பிக் பாஸ் சீசன் 6: கதறி அழுத ஜனனி; ஷாக்கான  ரசிகர்கள்
X
பிக்பாஸின் 6 வது சீசன் தற்போது களை கட்ட துவங்கியுள்ளது. இதனைக்காண்போர் எண்ணிக்கையும்நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Janani Bigg Boss 6 Tamil -விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. தற்போது ,இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாம் வாரத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. ஜிபி முத்து, அசீம், அசல், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கின்றனர்,இதில் ஜிபி முத்து, சாந்தி ஆகியோர் வெளியேறிவிட்டனர்.

பிக் பாஸ் என்றாலே எப்போதும் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம். சில சீசன்களுக்கு முன்பு செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா போட்டியாளராக வந்து அதிகம் பாப்புலர் ஆனார். அவர் அதற்கு பிறகு ஹீரோயினாக தற்போது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி தற்போது பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் இரண்டாம் வாரத்திலேயே கேப்டன் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு சிறப்பாகவே விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் நடந்து கொண்டு வருவதால் இதனால் ஏராளமான பிரச்சனைகள் உருவாகி வருகின்றன.

இதனால் கடந்த சில தினங்களாகவே பிக்பாஸ் வீடும் ரணகளமாக தான் இருந்தது. இதில் ஷெரினாவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே தான் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற பொம்மை டாஸ்க் முடிவடைந்த நிலையில், வெற்றிபெற்ற மூன்று போட்டியாளர்கள் இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கு மத்தியில், லக்சரி பட்ஜெட் டாஸ்க்கும் நடைபெற்று வந்தது. இதிலும், மணிகண்டன், ஜனனி, ரச்சிதா, நிவா, தனலட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

இன்றைய தினம் பொம்மை டாஸ்க் முடிவுக்கு வந்த நிலையில், இந்த டாஸ்கில் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்தனர். இறுதியில், ஷிவின் மற்றும் அசீம் இந்த வாரம் சிறப்பாக பங்கெடுக்காத நபர் என்றும் கூறி பிக் பாஸ் சிறைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் இன்று ஜனனி கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார். அவர் இந்த வாரம் நடந்த டாஸ்கில் ஜெயிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் அவருடன் எப்போதும் பேசும் போட்டியாளர்கள் கூட அவருக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.

"எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இங்கே தனியாக இருப்பது போல உணர்கிறேன். சில பேருக்கு என்னை பிடிக்கவில்லை. எனக்கு கஷ்டமா இருக்கு" என ஜனனி கேமரா முன்பு கூறி அழுதிருக்கிறார்.

எப்போதும் சிரித்துக்கொண்டு, ஜாலியாக இருக்கும் ஜனனி இப்படி திடீரென கதறி அழுதது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

Tags

Next Story
ai in future agriculture