Bigg Boss Season 6 Tamil: உப்புப்பெறாத விஷயத்துக்கு ரணகளமான பிக்பாஸ் வீடு

Bigg Boss Season 6 Tamil: உப்புப்பெறாத விஷயத்துக்கு ரணகளமான பிக்பாஸ் வீடு
X

பிக்பாஸ் வீட்டில் படைத்தளபதியாக அசீம்

பிக் பாஸ் வீடு ராயல் மியூசியமாக மாறி உள்ள நிலையில், அரச குடும்பம் சாப்பிடும் உணவில் உப்பை வாரிக் கொட்டிய விஷயம் பூதாகரமாகி ரணகளமானது .

பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்ற பலரது பெயர்கள் டோட்டல் டேமேஜ் ஆகி உள்ளன. ஆனாலும், ஒவ்வொரு நாளுக்குள் அவர்கள் உள்ளே இருக்க பெரிய சம்பளம் கிடைப்பதால், பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சீசனில் இதுவரை அசீம் மற்றும் தனலட்சுமியின் பெயர்கள் பெருமளவில் கெட்டுப் போயுள்ளன. ஆனாலும் அவர்களுக்கு ஆதரவு பெருகி உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் வழங்கப்படும். அவ்வகையில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருக்கிறது,. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றுள்ளனர். அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு எல்லோரும் செந்தமிழில் பேச வேண்டும் என கூறப்பட்டது. படைத்தளபதியாக அசீம் தான் இருந்தார். அவர் ராஜா ராணிக்கு கொடுக்கும் சாப்பாட்டை அவர் செக் பண்ணி கொடுக்க வேண்டும்.

சேவகியான ஷிவின் கொஞ்சம் குறும்புத்தனமாக அரச குடும்பம் உணவும் உணவில் உப்பை அதிகமாக கொட்டி விட அதன் விளைவு அசீமுக்கும் விக்ரமனுக்கும் இடையே பெரிய எச்சில் பிரச்சனையையே கிளப்பி விட்டது.

ஷிவின் தான் போட்டாங்க என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு அவர் தண்டனையையும் ஏற்க ரெடியாக உள்ளார். இந்நிலையில் விக்ரமன் அது படைத்தளபதியின் வேலை தான் என வாதாடுகின்றார். படைத்தளபதி அதைச் செக் பண்ணி இருக்கனும். அவர் செக் பண்ணாதது பிழை, அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என கூறுகின்றார்.


இதனால் கடுப்பான அசீம் நான் செக் பண்ணினன். ஆனால் எல்லாருடைய சாப்பாடையும் செக் பண்ண முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனக் கூறியதோடு விக்ரமனை பேர்சனலாக அட்டாக் பண்ண ஆரம்பித்தார்.

அதோடு மட்டுமல்லாமல், இனி எல்லாருடைய சாப்பாட்டையும் நான் எச்சில் பண்ணுகின்றேன், நாளையில் இருந்து உங்களுடைய சாப்பாட்டை எடுத்திட்டு வாங்க எச்சி துப்பி தாரேன் என கூறுகின்றார்.

கடுப்பான விக்ரமன் ஏன் அநாகரிகமாக பேசுகிறீங்க எனக் கேட்டதோடு ஏய் எனக்கூற கடுப்பான அசீம் வார்த்தைகளை அள்ளி வீச விக்ரமன் திடீரென சண்டை பிடிக்கின்றார். அத்தோடு ஆயிஷா மற்றும் தனலட்சுமி என எல்லோரும் அசீமோடு சண்டை பிடிக்கின்றார்கள்.

ஆனால், ஷிவினுக்கு பதிலாக நான் தான் உப்புப் போட்டேன் என கதிரவன் ஒப்புக் கொண்டு மக்கள் மத்தியில் வாக்குகளை அள்ளி வருகிறார்.


அசீம் தனது ரியல் ஃபேஸை காட்டத் தொடங்கி விட்டார். இந்த வாரம் கமல் மீண்டும் அசீமை எப்படி கண்டிக்கப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அசீமை ஏற்கனவே பூமர் அங்கிள் என்றெல்லாம் மீம் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்த நிலையில், தற்போது கோமாளி அசீம் என வறுத்தெடுத்து வருகின்றனர். இவ்வளவு கேவலமாக பிக் பாஸ் வீட்டில் சண்டை போடலாமா? தனாவுக்கு மட்டும் கேமரா இருக்கு பார்க்கிறாங்க பார்த்து பேசும்மான்னு அட்வைஸ் பண்ணதெல்லாம் டிராமாவா என திட்டித் தீர்த்து வருகின்றனர்.


இந்நிலையில், விக்ரமன் ரசிகர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் கோமாளி அசீம் என்றும் அவருக்கு ஏகப்பட்ட மீம்களை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!