வேட்டைக்கு ரெடியா? கமல் தோன்றும் பிக்பாஸ் புரோமோ ரிலீஸ்

வேட்டைக்கு ரெடியா? கமல் தோன்றும் பிக்பாஸ் புரோமோ ரிலீஸ்
X

பைல் படம்.

Bigg Boss Tamil Promo -பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் விரைவில் தொடங்க இருப்பதை முன்னிட்டு கமல்ஹாசன் பேசும் புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு உள்ளது.

Bigg Boss Tamil Promo -விஜய் டிவியில் 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் விரைவில் தொடங்க இருப்பதை முன்னிட்டு கமல்ஹாசன் பேசும் புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு உள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. இதில், ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் பணிபுரிந்த பலர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.

குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா, கேபிஒய் சாம்பியன்ஸ், பிக்பாஸ், பிபி ஜோடிகள் என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்து வருகின்றன. இதில் குறிப்பாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆண்டுக்கு 106 நாட்கள் ஒளிபரப்பாகி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் ராஜு வெற்றிபெற்றார்.

இதனை தொடர்ந்து டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் 24 மணி நேரம் ஒளிபரப்பாகும் தனி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதனை தொடக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவருக்கு சினிமா ஷூட்டிங்குகள் இருந்த காரணத்தால் பின்னர் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வந்தார். அதில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

Bigg boss 6-இந்நிலையில் பிக் பாஸ் 6 வது சீசன் எப்போது ஒளிபரப்பாகும், அதில் கமல்ஹாசன் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி பிக் பாஸ் 6 தொடர்பான புரோமா முன்னறிவிப்பு காட்சியை விஜய் டிவி வெளியிட்டது. அதில் கடந்த பிக் பாஸ் சீசன் வெற்றியாளர் ராஜு இடம்பெற்றார்.

அதன் இறுதியில், "பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு அறிய வாய்ப்பு! உடனே vijay.startv.com லாகின் செய்து பிக் பாஸில கலந்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து பதவியேற்றம் செய்யுங்கள். கடைசி நாள் 04/09/2022 நள்ளிரவுக்குள்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக்பாஸ் சீசன் 6 புரோமோ வெளியானது. அதில், இடி மின்னல் சத்தங்களுக்கு இடையே கதவை திறந்து கமல்ஹாசன் வருகிறார். கடிகாரத்தை பார்த்து வழக்கமான தன்னுடைய ஸ்டைலில் "வேட்டைக்கு ரெடியா?" என்று கேட்கிறார். இதன் மூலம் மீண்டும் பிக்பாஸுக்கு கமல் வந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!