'மகேஸ்வரி ஆட்டம் தாங்கலே' - கொதிக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

மகேஸ்வரி ஆட்டம் தாங்கலே - கொதிக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்
X

bigg boss maheshwari- மகேஸ்வரிக்கு வலுக்கும் எதிர்ப்பு - அசீமுக்கு பெருகும் ஆதரவு

Bigg Boss Maheshwari- இந்த வாரம் நாமினேஷனில் இல்லாததால், மகேஸ்வரி ஆட்டம் ஓவராக இருப்பதாக, பிக்பாஸ் ரசிகர்கள் வசைபாடுகின்றனர்.

Bigg Boss Maheshwari- கடந்த இரண்டு வாரங்களாக, உலகநாயகன் கமலிடம் வாங்கிய டோஸ் போதுமென்று நினைத்து, பாத்ரூமில் கதறி அழுத அசீம் இந்த வாரம் முடிந்த வரை அமைதியாக இருக்க முயற்சித்து வருகிறார். வழக்கம்போல், அதிரடியாக பேசுவதை வெகுவாக குறைத்து வருகிறார். யாரிடமும் நியாயம், தர்மம் பேசுவதை தவிர்க்க துவங்கி உள்ளார்.


ஆனால், அசீமை இந்த வாரம் எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று, மீண்டும் அவரை சீண்டி மகேஸ்வரி செய்யும் 'சைலன்ட் ஸ்ட்ராட்டஜி' வலையில் மீண்டும் அசீம் சிக்கிக் கொள்ளக் கூடாது என, பிக்பாஸ் ரசிகர்கள் எச்சரித்து வருகின்றனர். தற்போது வெளியான 3வது புரமோவை பார்த்த ரசிகர்கள், அதிகளவில் அசீமுக்கு ஆதரவாகவும் மகேஸ்வரிக்கு எதிராகவும் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர்.


* நாமினேஷனில் இல்லை, என்ன மகேஸ்வரி இந்த வாரம் எலிமினேஷன் இல்ல அதனால் தான் ஓவராக இருக்கீங்களா? என நாமினேஷனில் இருந்து மகேஸ்வரி 'எஸ்கேப்' ஆனதால் தான் இந்த ஆட்டம் ஆடுகிறார் என வெளுத்து வாங்கி உள்ளார்கள் நெட்டிசன்கள்.

* 'என்ன கால் வைக்கிற இடமெல்லாம், கண்ணி வெடியா இருக்கே,' என்பது தான் இப்போதைக்கு அசீமோட ரியாக்‌ஷனாக இருக்கும் என பிக் பாஸ் ரசிகர்கள் அசீமையும் கலாய்த்து வருகின்றனர்.

* 'அசீம் அமைதியா இருந்தாலும், இந்த மகேஸ்வரி சும்மா இருக்க விடமாட்டீங்கறாரே,' என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

* 'அசீமை இனி எவனும் நம்பமாட்டான்... பைத்தியம் மாறி கத்திட்டு கிடந்தா, எவன் நம்புவான்.. நான் மட்டும் பெரிய அறிவாளி மாறி பேசிட்டு இருக்கான்.." என இந்த பிக்பாஸ் ரசிகர் ஒருவர், விளாசித் தள்ளி உள்ளார்.


* ஒவ்வொரு வாரமும் அதிக ஓட்டுக்களுடன் முதல் ஆளாக நாமினேஷனில் இடம்பிடித்தாலும் அசீமுக்கு, ஓட்டுக்கள் கிடைத்து விடுகின்றன.

* 'பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே, மற்ற போட்டியாளர்களுடன் கத்தி பேசுவார் மகேஸ்வரி. ஆனால், அவர் பக்கமும் நியாயமும் இருக்காது. அவரிடம் எந்தவொரு பாயிண்ட்ஸும் இருக்காது' என ரசிகர்களின் மீம் டிரெண்டாகி வருகிறது.

* 'கமல் சார் எபிசோடுக்கு பிறகு ரொம்பவே அசீமிடம் மாற்றம் நிகழ்ந்துள்ளது. மகேஸ்வரி அப்படி பேசியும், அசீம் இப்படி அமைதியோ அமைதி என இருப்பது எல்லாம் வேற லெவல் மாற்றம்' என ரசிகர்கள் அசீமுக்கு சப்போர்ட் செய்து, மகேஸ்வரியை திட்டி வருகின்றனர்.


* இதில், 'அந்த டிவி, இந்த டிவி' டாஸ்க்கில், விக்ரமனை, பாடி லாங்குவேஜ் காட்டி பழித்த மகேஸ்வரிக்கு, இன்னும் திட்டுமழை பொழிய, நெட்டிசன்கள் தயாராகி வருகின்றனர். மேலும், நடுவர் பணியை சரியாக செய்யவில்லை என்று சுட்டிக்காட்டிய அசீமிடம், ' அப்படித்தான், ஜட்ஜ்மென்ட் செய்வேன், அதை பற்றி கேள்வி கேட்க, உங்களுக்கு உரிமை இல்லை. அது என்னோட இஷ்டம்' என்றும் தன் அகங்காரத்தை வெளிப்படுத்தி, ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார் மகேஸ்வரி.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story