Bigg Boss 6 Tamil: இரண்டாவது நாளே பஞ்சாயத்த கூட்டிட்டாங்க! எரிமலையான ஜி பி முத்து

Bigg Boss 6 Tamil: இரண்டாவது நாளே பஞ்சாயத்த கூட்டிட்டாங்க! எரிமலையான ஜி பி முத்து
X
Bigg Boss 6 Tamil -எப்பவும் காமெடி பண்ணிட்டிருக்கும் ஜி பி முத்துவுக்கு கோபம் வருமா என சந்தேகப்படுமளவுக்கு அவர் விக்ரமனிடம் கோபமாக பேசினார்

Bigg Boss 6 Tamil -தங்களுக்குள் அறிமுகம் இல்லாத போட்டியாளர்கள் எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டில் 100 நாட்கள் தங்கும்போது அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களே பிக்பாஸ் நிகழ்ச்சி. இடையில் பிக்பாஸ் சொல்லும் அனைத்து டாஸ்க்குகளை முடிக்க வேண்டும்.

கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்சிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பொதுவாக ஒரு வாரம் போட்டியாளர்களுக்கு இடையே எந்தவிதமான சண்டையும் இருக்காது. ஆனால் இந்த சீசனில் இரண்டாவது நாளே சண்டை ஆரம்பித்து விட்டது. என்னப்பா இது டாஸ்க் ரூமா, மீன் மார்க்கெட்டா என சந்தேகப்படுமளவுக்கு இப்படி அடிச்சுக்குறாங்க? என்னும் அளவிற்கு இருந்தது

ஐந்து அணிகளாக உள்ள ஹவுஸ்மேட்ஸ், தனித்தனியாக வந்து தரப்பட்டிருக்கும் மைக்கில் 'ஓ'வென்று கத்த வேண்டும். யார் அதிக டெசிபலில் கத்துகிறார்களோ, அந்த அணிக்கு ஒரு ஸ்டாராம்.

பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கை விளையாட ஹவுஸ் மேட்ஸ் நாலு டீமா இருக்குறாங்க. இதில் மஞ்சள் மற்றும் சிவப்பு டீம் ஒரு பக்கமும், பச்சை மற்றும் பர்பிள் இன்னொரு பக்கமும் இருந்தார்கள்.

அஸிம், உயிரைக் கொடுத்து 'ஓ'வென்று அவர் கத்தியது வீணாகப் போயிற்று. டெக்னிக்கல் பிரச்னையினால் அது பதிவாகவில்லை. ஜி.பி.முத்து மட்டும் 1.5 லெவலில் கத்தி புதிய சாதனையை ஏற்படுத்தினார்.

அப்போது சிவப்பு டீமில் இருக்கும் விக்ரமன் எழுந்து பச்சை டீமுக்கு இரண்டு சான்ஸ் கொடுத்தது போல தங்கள் டீமுக்கும் இரண்டு சான்ஸ் தர வேண்டும் என கேட்கிறார். அப்படி தரமுடியாது என்று பச்சை மற்றும் பர்பிள் டீம் சண்டை போடுகிறார்கள். இந்த சண்டையில் கடுப்பான ரக்சிதா, எனக்கு சான்சே வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார்

இதுல முக்கியமான விஷயம் என்னன்னா எப்போதும் ஜாலியா, சிரிச்சுட்டு சந்தோஷமா இருக்கும் ஜி பி முத்து கோபமாகிறார். எனது கணவர் சண்டை போட மாட்டார், ஜெயித்து விட்டு வருவார் என ஜிபி முத்துவின் மனைவி பேட்டி அளித்த நிலையில் எப்பவும் காமெடி பண்ணிட்டிருக்கும் ஜி பி முத்துவுக்கு கோபம் வருமா என நாம் சந்தேகப்படுமளவுக்கு அவர் கோபமா பேசினார்

"நீங்க பண்றது தப்பு, எனக்கு ஸ்டாரே வேண்டாம், நீங்க தப்பா ஆடுறீங்க" அப்படின்னு செம கோபமா பேசினார்.

நமக்கெதுக்குடா வம்பு சாமி! ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாப்போம் என ஜனனி, கதிரவன், ஆயிஷா, ஷெரீனா, குயின்சி ஸ்டான்லி, நிவா ஆகியோர் அமைதியாக ஒருபக்கம் நின்று வேடிக்கை பார்த்தனர்

இதனை அடுத்து மைக்கில் திடீரென ரட்சிதா கத்தும் காட்சியும் மணிகண்டன் விக்ரமினிடம் ஏதோ கோபமாக பேசும் காட்சியும் உள்ளது.

மொத்தத்தில் பிக்பாஸ் சீசன் 6 போட்டியில், ஆரம்பத்திலேயே இரண்டு அணிகளாக பிரிந்து சண்டை போடத் தொடங்கிவிட்டதால், இனி அடுத்தடுத்த நம்பலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!