Bigg Boss 6 Tamil: ஒரு டீ கேட்டது குத்தமாடா? அதுக்கு ஒரு பஞ்சாயத்தா? சே..சே.. சே..

Bigg Boss 6 Tamil: ஒரு டீ கேட்டது குத்தமாடா? அதுக்கு ஒரு பஞ்சாயத்தா? சே..சே.. சே..
X
Bigg Boss Season 6 Tamil -பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்த இரண்டு நாளிலே டீ குடிப்பதில் சண்டை ஏற்பட்டு விஜே மகேஷ்வரியிடம் அசிம் சண்டையிட்டார்.

Bigg Boss Season 6 Tamil -நடிகர் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொடக்கி வைத்தார். இதில், கடந்த முறைபோல் இல்லாமல் ஓரளவுக்கு நமக்கு தெரிந்த முகங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா, தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமான இருவாரத்திற்கு பிறகே கடுமையான டாஸ்க் கொடுக்கப்படும் ஆனால், இந்த முறை முதல் நாளே கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கிச்சன் டீம், வாஷிங் டீம், கிளினிங் டீம், பாத்ரூம் டீம் என நான்கு டீம்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

அதில், கிச்சன் டீமில் உள்ள நபர்கள், ஹவுஸ் மேட்ஸ் கேட்டால் உணவை ஊட்டி விட வேண்டும். அதுபோல், பாத்ரூம் டீமில் உள்ளவர்கள், ஹவுஸ் மேட்ஸுக்கு பாத்ரூம் வந்தால் சிகப்பு கம்பளம் விரித்து பாத்ரூம் வரை அழைத்து சென்றுவிட வேண்டும். அதேபோல கிளினிங் டீம் மெத்தையை விதவிதமாக அலங்கரித்து வைக்க வேண்டும் என முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏடாகூட விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்க் தொடங்கி உள்ளதால் போட்டியாளர்கள் தங்கள் ஆட்டத்தை ஆட தொடங்கி உள்ளனர். வழக்கமாக எல்லா பிரச்னையும் சாப்பாட்டில் இருந்துதான் ஆரம்பிக்கும். இந்த முறையும் டீயில் இருந்து பிரச்சனை தொடங்கி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இரண்டாவது நாளில் கிச்சனில் அசீம் டீ போட சென்ற போது அவருக்கும் கிச்சன் டீமில் உள்ள மகேஷ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

டீ பிரியரான அசிம் டீ வேண்டும் என கேட்க, மகேஷ்வரி இப்போது டீ கொடுக்க முடியாது எல்லாரும் எப்போ டீ குடிக்கிறாங்களோ அப்போது தான் டீ போடுவேன் என சொல்கிறார்.

இதனால்,கடுப்பான அசிம் நீ என்ன பிக் பாஸ் மாதிரி பேசுற, நான் எப்ப சாப்பிட வேண்டும் என நீ சொல்லக்கூடாது. எனக்கு இப்போ பசிக்குது இப்போ எனக்கு டீ வேணும் என மகேஷ்வரியிடம் எகிற, மகேஷ்வரியோ தினமும் காலையில் ஒருமுறை, மாலை ஒருமுறை மட்டும்தான் டீ. மற்ற நேரத்தில் டீ கிடையாது என கூறி விட்டார். இதனால், சிறிது நேரம் பிக் பாஸ் வீடு ரணகளமானது.

நிகழ்ச்சியின் இடையில் தொடர்ந்து பேசிய மகேஷ்வரியும் அசீமும் நான் உங்களை காயப்படுத்தவேண்டும் என்று பேசவில்லை என்று கூறி மாறிமாறி சாரி சொல்லிக்கொண்டு, இனி நாம் நண்பர்கள் எந்த பிரச்னை வந்தாலும் பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும் அசீம் மகேஷ்வரியிடம் கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture