பிக் பாஸ்-6 சீசன் ரெடி.. நீங்களும் கலந்துகொள்ள வாய்ப்பு

bigg boss 6 tamil promo - விஜய் டிவியில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. அதேபோல் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களையும் நல்ல முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து வருகிறது. இந்நிகழ்ச்சி 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 6 சீசன் தொடங்க இருக்கிறது. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வகையில் 'பிக் பாஸ் -6' வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த சீசனையும் வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் கலந்துகொள்வார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களில் பெயர்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகியும் வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்க்காத தகவலாக 'பிக் பாஸ்-6' நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமல்ல சாமானிய மக்களும் கலந்து கொள்ளலாம் என விஜய் டிவி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க விரும்புபவர்கள் https://vijay.startv.com/BigBoss/Index என்ற இணையதள முகவரியில் லாகின் செய்து, பிக்பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை வீடியோவாக பதிவு செய்து அப்லோடு செய்ய வேண்டும்.
விண்ணப்பித்தவர்கள் பிக் பாஸ் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu