'டவல்' பிரச்னை - குயின்ஸி காலில் விழுந்த ஜனனி

டவல் பிரச்னை -  குயின்ஸி காலில் விழுந்த ஜனனி
X

bigg boss 6 queency -  பிக்பாஸ் வீட்டில், பரபரப்பை ஏற்படுத்திய ‘துண்டு’ பிரச்னை 

Bigg Boss 6 Queency-குயின்ஸி டவலை ஜனனி எடுத்து பயன்படுத்தியதால், சண்டை உருவானது. ஒருகட்டத்தில், ஆவேசமடைந்த ஜனனி, குயின்ஸி காலில் விழுந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

Bigg Boss 6 Queency- தினந்தோறும் புதுப்புது பிரச்சனைகளாக சென்று கொண்டிருக்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில், நேற்று குயின்ஸி மற்றும் ஜனனி இருவருக்கிடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது. அது தற்போது, சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. பொதுவாகவே 'பிக்பாஸ்' வீட்டில் குயின்ஸியின் நடவடிக்கை, நிகழ்ச்சியை பார்க்கும் பலருக்கும் பிடிக்கவில்லை.


ஏனென்றால், 'டாஸ்க்' எனப்படும் போட்டி விளையாட்டில் கவனத்தை செலுத்தாமல் புறணி பேசுவது, தேவையில்லாமல் கோபப்பட்டு முகத்தை திருப்புவது என்று அவரின் நடவடிக்கைகள் பலருக்கும் எரிச்சலை கிளப்புகிறது. அதில் தற்போது பலருக்கும் பிடித்த ஜனனி, குயின்ஸியின் காலில் விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஜனனி, குயின்ஸியின் டவலை எடுத்து உபயோகப்படுத்தி விட்டார். ஒரு அவசர நேரத்தில், குயின்ஸி டவல் என தெரியாமல் எடுத்து பயன்படுத்துகிறார்.

இதைப்பார்த்து கடுப்பான குயின்ஸி, ' என்னுடைய டவலை என்னைத்தவிர யாரும், என் வீட்டில் கூட எடுத்து பயன்படுத்த மாட்டார்கள். அது எனக்கு பிடிக்காது,' என சக போட்டியாளர்களின் முன்னிலையில், ஜனனியை திட்டி விடுகிறார். ஆனால், ஜனனி 'தெரியாமல் எடுத்து விட்டேன்' என்று எவ்வளவோ சமாதானம் பேசுகிறார். குயின்ஸி, ஜனனி என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன ஜனனி, பாத்ரூமில் நின்று பேசிக்கொண்டே அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.


அதன் பிறகும் கூட குயின்ஸி, அதைப்பற்றியே பேசியதால் கடுப்பான ஜனனி கையில் இருக்கும் காபி கப்பை கீழே போட்டு உடைக்கிறார். அப்போது, மகேஸ்வரி இருவரையும் சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். 'கோபமான இந்த நேரத்தில் இருவருமே தொடர்ந்து பேசாமல், சிறிது நேரம் கழித்து, இருவரும் பேசினால், பிரச்னை தீர்ந்துவிடும்,' என்று, யோசனை சொல்லிவிட்டு நகர்கிறார்.

' என்னுடைய டவலை, ஜனனி எடுத்ததால், அதை திடீரென பார்த்ததால் வந்த கோபத்தில், தெரியாமல் அனைவரது முன்னிலையில் கோபமாக பேசிவிட்டேன், நான் பேசியது தவறுதான்' என்று அந்த நிகழ்வையே திரும்ப திரும்ப குயின்ஸி சொல்வதால் கோபமடையும் தனலட்சுமி,'மீண்டும் அதைப் பற்றியே பேசி பேசி ஏன், ஜனனியை காயப்படுத்துகிறீர்கள்?' என, குயின்ஸியை கண்டிக்கிறார்.


ஏற்கனவே ஒரு டாஸ்க்கின் போது ஜனனி வெற்றி பெற்றது குயின்ஸிக்கு பிடிக்கவில்லை. அது அவருடைய முகத்திலேயே அப்பட்டமாக தெரிந்தது. அதனாலேயே அவர் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தார். தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை விடாத குயின்ஸி நன்றாக ஜனனியை பழி வாங்கி இருக்கிறார்.

இந்த நிகழ்வும், பிரச்னையும் இன்றைய நிகழ்ச்சியில் நிச்சயம் கமலின் பார்வைக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. இதை உலக நாயகன் எப்படி கையாள்வார் என்பதை காண, ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!