ஜூலையில் மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி - கமல் வருவாரா?

ஜூலையில் மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி - கமல் வருவாரா?
X
வருகிற ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில், பிக்பாஸ் சீசன் - 6 நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. விக்ரம் படத்திற்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நடிகர் கமல்ஹாசன், மீண்டும் இந்த நிகழ்ச்சியை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஆண்டு தோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பெரும் வரவேற்பு உள்ளது. இதில், பிரபலங்கள் ஒரே வீட்டில், வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். பங்கேற்பாளர்களுக்கு, போட்டிகள், இலக்குகள் என்று, இதில் பல சுவாரஸ்யங்கள் இருப்பதால், பல தரப்பினரும் விரும்பி பார்க்கின்றனர்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை, கடந்த 5 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். விக்ரம் திரைப்படத்திற்காக, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல், மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருக்கிறார்.

அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன், விரைவில் விஜய் டிவியில் தொடங்க உள்ளது. விக்ரம் படப்பிடிப்பை முடித்துவிட்ட நடிகர் கமல்ஹாசன், அரசியலில் தற்போது பிஸியாக இல்லாத நிலையில், மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்ப முடிவு செய்துள்ளார். எனவே, பிக்பாஸ் 6வது சீசனை, அவரே தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 ஜூலை மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தற்போது விஜய் டிவி தேர்ந்தெடுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!