Actor Shaam Interview-வாரிசு ரிலீசுக்கு முன்பே.. கண் முன்னாடி தெரிஞ்ச விஷயம்: நடிகர் ஷியாம் பேட்டி

Actor Shaam Interview-வாரிசு ரிலீசுக்கு முன்பே.. கண் முன்னாடி தெரிஞ்ச விஷயம்: நடிகர் ஷியாம் பேட்டி
X

நடிகர் ஷியாம்.

Actor Shaam Interview-வாரிசு படம் ரிலீசுக்கு முன்பே வெற்றி கண் முன்னாடி தெரிந்ததாக நடிகர் ஷியாம் பேட்டியளித்துள்ளார்.

Actor Shaam Interview-நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11ம் தேதி முதல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகின. இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திரக் கூட்டமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் வாரிசு படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு மற்றும் கே எல் பிரவீன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டார். வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் வணிக ரீதியாகவும் இந்த படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. அதன்படி உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயும், 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்தது என அறிவிக்கப்பட்டது. மேலும் வாரிசு படம் 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

Actor Shaam Interview

சமீபத்தில் விமர்சகர்களுக்கு பதிலளித்த வம்சி, நான் ஒரு பிரமாதமான படம் செய்கிறேன் என்று சொல்லவே இல்லை. ரசிகர்களை மகிழ்விப்பதற்காக படங்களைத் தயாரித்து வருகிறேன். வாரிசு மகிழ்வித்துள்ளதாக நான் நம்புகிறேன்; அதனால்தான் அது பாக்ஸ் ஆபிசில் வெற்றி நடை போடுகிறது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் டிஜிட்டல் ஊடகச் சேனல் ஒன்றுக்கு வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி மற்றும் நடிகர் ஷியாம் ஆகியோர் 'வாரிசு ரசிகர்கள் கொண்டாட்டம்' என்ற பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளனர். இந்த நேர்காணலில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரன் அவர்களுடன் உரையாடினார். அப்போது வாரிசு படம் குறித்து பல்வேறு கேள்விகளை அவர்களிடம் கேட்டார். அதற்கு சற்றும் தயங்காமல் வாரிசு படம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தனர். ரவீந்திரனும் நான் தளபதி விஜய்யின் வெறிகொண்ட ரசிகன் என கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

ரவீந்திரனின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய நடிகர் ஷியாம், இந்த கதையை கேட்கும்போது நான் ஈஸியாக இணைந்துவிட்டேன். நான் 21 வயதாக இருந்தபோது, என்னுடைய அப்பாவிடம் தவறாக நடந்துகொண்டேன். ஆனால் எனக்கு கருத்து தெரிந்து அப்பாவிடம் மன்னிப்பு கேட்பதற்குள் அவர் கடந்துவிட்டார்.

Actor Shaam Interview

வாரிசு படத்தில் அப்பாவாக நடிக்கும் சரத்குமார் சாருடன் நடிக்கும்போது அந்த கில்டி எனக்கு வந்தது. ஏனென்றால் வாரிசு படத்தில் சரத்குமாரிடன் அதேபோல் நடந்துகொண்டிருப்பேன் என தெரிவித்தார். மேலும் தில் ராஜு அவர்கள் இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலவாகட்டும் என தெரிவித்திருந்தார். ஏனென்றால் அவ்வளவு டெடிகேஷன், ஹானஸ்டி, என ஷியாம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் வாரிசு வெளியாவதற்கு முன்பே பாக்ஸ் ஆபிஸ் வெற்றி கண் முன்னே தெரிநத்ததாகவும் எவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!