ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்களால் உருவான மியூஸிக்கல் ஆல்பம் சர்ச்சை

ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்களால் உருவான மியூஸிக்கல் ஆல்பம் சர்ச்சை
X
நெட்ஃபிளிக்ஸ் நேத்திக்கு `நம்ம ஸ்டோரிஸ்' என்ற மியூஸிக்கல் ஆல்பத்தை வெளியிட்டது. இப்ப சர்ச்சையை சந்திக்கத் தொடங்கிடுச்சு.

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் நேத்திக்கு தென்னிந்திய தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்களால் உருவாக்கப்பப்பட்ட `நம்ம ஸ்டோரிஸ்' என்ற மியூஸிக்கல் ஆல்பத்தை வெளியிட்டது. இப்ப சர்ச்சையை சந்திக்கத் தொடங்கிடுச்சு.

`தென்னிந்திய கதைகளின் கொண்டாட்டம்' என்ற மையக்கருவை கொண்டு, தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் பிரபல ராப் பாடகர்களான அறிவு, நீரஜ் மாதவ், சிரி மற்றும் ஹனுமன்கிண்ட் ஆகியோரை கொண்டு இந்த ஆல்பம் தயாராகி இருக்குது.

இந்த ஆல்பத்தோட கடைசியில் மலையாள ராப் பாடகர் மற்றும் நடிகருமான நீரஜ் மாதவ் மலையாள பெருமைகளை பற்றி பாடும்போது ``நான் அதிகாலையில் பரோட்டா மற்றும் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்" அப்படீனு பாடுவார். இவரின் நிஜ வரிகளில் `பீஃப்' எனப் பதிவு செய்திருந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் தனது ஆங்கில மொழிபெயர்ப்பில் பீப் (Beef) என்பதற்கு பதிலாக பி.டி.எஃப் (BDF) எனப் பயன்படுத்திபுடுச்சு.

இடனே அடடே.. பாருங்கய்யா நார்த் ஸ்டேட்ஸ்களை கவனத்தில் கொண்டு மாட்டிறைச்சியை தைரியமாக வெளிப்படுத்த நெட்ஃபிளிக்ஸ் தயங்குது என்று கேரளத்தைச் சேர்ந்த நெட்டிசன்கள் பலரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

பிரபல, மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் தனது ட்வீட்டில், ``நெட்ஃபிளிக்ஸ் இந்தியா, நீங்கள் மலையாள உரையாடல்களை வெளியிட முன், மாட்டிறைச்சியின் எழுத்துப் பிழைகளைக் கற்றுக்கொள்ளுங்கள். மாட்டிறைச்சியின் பெயர் B-E-E-F. சங்கிபோபியாவுடன் இங்கு வர வேண்டாம்" என்று காட்டமாக மாட்டிறைச்சியின் எழுத்துப் பிழைகளைக் கற்றுக்கொள்ள நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.

இன்னொரு ட்விட்டர்வாசி ``பாடல் எல்லாம் அருமையாக இருக்கிறது. ஆனால் இதில் முரண்பாடு என்னவென்றால், தென்னிந்தியாவின் `வேற்றுமையில் ஒற்றுமையை' கொண்டாடும் ஒரு பாடலில் எல்லா மலையாளிகளும் விரும்பும் ஒரு பெயரைகூட தெளிவாக அந்த நிறுவனத்துக்கு கூற தைரியமில்லை" என்று நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவை கடுமையாக சாட்டியிருந்தார். இதே மாதிர் ஏகப்பட்ட பேரால் இந்த விவகாரத்தால் நெட்ஃபிளிக்ஸ் சவுத் பாந்தாடப்படுது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!