பாஃப்டா விருதுகள் 2023: ரெட் கார்பெட்டில் கெத்தாக நடந்து வந்த இளவரசர் வில்லியம்ஸ், கேத்திரீன்

ரெட் கார்ப்பெட்டில் நடந்து வரும் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேத்திரீன்.
Bafta awards 2023 in tamil-பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சவுத்பேங்க் சென்டரில் உள்ள ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் நடந்தது. இந்த விழாவில் ஆல் க்வைட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்டில் 14 பரிந்துரைகளுடன் முன்னணியில் இருந்தது. அதைத் தொடர்ந்து த பன்ஷீஸ் ஆஃப் இனிஷெரின் மற்றும் எவ்ரிவேர்டிவ் ஆல் அட் ஒன்ஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து இருந்தன. விருது வழங்கும் விழாவிற்கு முன்பு, நட்சத்திரங்கள் சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதன்முறையாக வேல்ஸின் புதிய இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் (கேத்தரீன்) ஆகியோர் ஜோடியாக இவ்விழாவில் கலந்து கொண்டனர். இதனையடுத்து 2023 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவிற்கு, இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேத்ரீதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான அலெக்சாண்டர் மெக்வீன் கவுனை இளவரசி அணிந்திருந்தார். இளவரசர் வில்லியம்ஸ் அழகான கருப்பு கோட் அணிந்து இருந்தார். இருவரும் படு ஸ்டைலாக ரெட் கார்பெட்டில் நடந்து வந்தனர். இதனை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்தனர்.
இதுகுறித்து BAFTA செய்தித் தொடர்பாளர் வெரைட்டி கூறியதாவது:
கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இளவரசர் மற்றும் இளவரசி கலந்து கொண்டனர். இளவரசர் பிலிப் மறைந்த காரணத்தால் அதன் பின்பு 2021 ம் ஆண்டு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவர்களால் கலந்து கொள்ள இயலவில்லை. அதன் பின்னர் 2023 ம் ஆண்டு நடைபெறும் இந்த விழாவில் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேத்திரீன் ஆகியோர் கலந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu