நேற்று 'மாண்டஸ்' புயல்; இன்று 'பாபா' புயல் - ரசிகர்கள் 'குஷி'

நேற்று மாண்டஸ் புயல்; இன்று பாபா புயல் - ரசிகர்கள் குஷி
X

BABA MOVIE REVIEW- ‘பாபா’ மீண்டும் இன்று ‘ரிலீஸ்’ ஆனது; ரஜினி ரசிகர்கள் உற்சாகம்.

BABA MOVIE REVIEW-தமிழகத்தை ‘மாண்டஸ்’ புயல் மிரட்டிய நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ படம் ரீ ரிலீஸ் ஆனது. உற்சாக மழையில் நனைந்த ரசிகர்கள், படத்தை கொண்டாடி வருகின்றனர்.

baba movie re release date, BABA MOVIE REVIEW, Rajini, AR Rahman, Suresh Krishna - தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72வது பிறந்த நாள் நாளை மறுதினம் ( 12ம் தேதி) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு புது படம் ரிலீஸ் அல்லது புதுப்பட அறிவிப்போ வெளியாவது வழக்கம்.


அந்த வகையில், இந்த ஆண்டு, 'பாபா' படம் இரண்டாவது முறையாக ரிலீஸ் ஆகி உள்ளது. இதனை காலை முதல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் திரைக்கதை அமைத்து தயாரித்த படம் 'பாபா'. இப்படத்தில், ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, விஜயகுமார், கவுண்டமணி, எம்.என்.நம்பியார், ரம்யா கிருஷ்ணன், சுஜாதா, சீமா ஆகியோர் நடித்திருந்தார்கள். 'இசைப்புயல்' ஏஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.


மகா அவதாரமான பாபாஜியை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் நாத்திகராக இருக்கும் ரஜினிக்கு, 'பாபா'வின் அருள் கிடைக்கிறது. இதையடுத்து அவருக்கு 7 மந்திரங்களை 'பாபா' கொடுக்கிறார். ஆனால், நாத்திகரான ரஜினி, அந்த மந்திரத்தை சோதனை செய்து பார்த்து வீணாக்கி விடுகிறார். கடைசியாக அவருக்கு இறைவன் மீது நம்பிக்கை வந்து, 'வாழ்க்கை ஓர் மாயை' என்பதை புரிந்து கொள்கிறார்.

'பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் புது பொலிவுடன் மீண்டும் திரையரங்கில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிரேடிங், அதோடு 'பாபா' படத்துக்கு ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசி உள்ளார். படத்தின் ஆரம்பத்தில் அவரது உரையாடலோடு படம் தொடங்கி உள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இந்த படத்திற்கு மீண்டும் மெருகேற்றி வெளியிட்டுள்ளனர்.


இன்று 'பாபா' படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. புயலாவது, மழையாவது என 'பாபா' படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள், அதிகாலை 4 மணியில் இருந்தே தியேட்டர் வாசலில் காத்திருந்து, படத்தை ரசித்து பார்த்தார்கள். '20 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படமாக இருந்தாலும், படத்தில் இருக்கும் எனர்ஜி, இப்போதும், கொஞ்சம் கூட குறையவே இல்லை; சூப்பராக இருக்கிறது,' என்கின்றனர் ரசிகர்கள்.

அப்போது, படம் பார்த்ததற்கும், இப்போது படம் பார்ப்பதற்கும் வேறுமாதிரி இருக்கிறது. இருந்தாலும், பழைய 'பாபா' படத்தில் சில எமோஷனல் காட்சிகள் இருக்கும் அதை 'எடிட்' செய்து தூக்கி விட்டார்கள் அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது, என்கிறார் ஒரு ரசிகர்.


படத்தின் நீளத்தை குறைப்பதற்காக, பல இடங்களில் முக்கிய காட்சிகள் வெட்டப்பட்டிருப்பது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அது, படம் பார்த்தவர்களின் முகத்தில் அந்த ஏமாற்றம் பிரதிபலிக்கிறது.

தியேட்டரில் 'பாபா' ரீ ரிலீஸாகி உள்ளதை முன்னிட்டு, ரசிகர்களோடு ரசிகராக படம் பார்த்த, லதா ரஜினிகாந்த் கூறுகையில்,

'முன்பு, 'பாபா' படம் பார்க்கும் போது என்ன எனர்ஜி இருந்ததோ, அதே எனர்ஜிதான் இப்போதும் இருக்கிறது. அப்போது வேறுவிதமான எமோர்ஷனல் இருந்தது, ஆனால், இப்போது மகிழ்ச்சி கலந்த எமோரஷனலாக இருக்கிறது. இப்போது இருக்கும் இளம் ரசிகர்களுக்கு இந்த படத்தை பற்றிய புரிதல் இருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, ஆன்மீக விழிப்புணர்வு, அதிகளவில் ஏற்படுகிறது, என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!