'பாகுபலி': 500 கோடி வசூல் சாதனையில் முதல் தென்னிந்தியத் திரைப்படம்..!

பாகுபலி: 500 கோடி வசூல் சாதனையில் முதல் தென்னிந்தியத் திரைப்படம்..!
X

பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸ் தோன்றும் காட்சி.

நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்த 'பாகுபலி' ஏழு ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், அதன் சாதனையை திரை ரசிகர்கள் நினைவுகூர்ந்தனர்.

கடந்த 2015 ஜூலை 10-ம் தேதி ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பிரமாண்ட வரலாற்றுப் புனைவுத் திரைபடமான 'பாகுபலி' படத்தினை அத்தனை எளிதில் யாரும் மறந்திட முடியாது. சற்றேறக்குறைய 160 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 'பாகுபலி' முதல் பாகம் 815 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்து இந்தியத் திரையுலகையே தென்னிந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. குறிப்பாக, தெலுங்குத் திரையுலகின் திசைநோக்கி… என்பதில் மிகையொன்றுமில்லை.

இந்தநிலையில் படத்தின் நாயகனான நடிகர் பிரபாஸ், இந்திய அளவில் பிரபலமான நடிகராக உச்சம் தொட்டார். அத்துடன், 500 கோடி வசூலைக் கடந்த முதல் தென்னிந்தியத் திரைப்படம் என்ற பெருமையை தென்னிந்தியத் திரைவரலாற்றின் பக்கங்களில் 'பாகுபலி' வரித்துக் கொண்டது.

மேலும், உலகத் திரைப்பட வர்த்தகத்தில் மாநிலமொழிப் படங்களில் குறிப்பாக, தென்னிந்தியத் திரைப்படங்கள் இந்திப் படங்களுக்கு இணையானது என்பதை படைப்பு மற்றும் வணிக அடிப்படையிலும் பறைசாற்றி நிரூபித்தது 'பாகுபலி'. 2015ல் வெளிவந்த முதல் பாகத்தின் தொடர்ச்சியாக 2017ல் வெளிவந்த 'பாகுபலி' இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விடவும் மூன்று மடங்கு வசூல் செய்து தனது சாதனையை தானே முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!