தீபாவளிக்கு வரும் அயலான்... சுதந்திர தினத்தில் மாவீரன்! டபுள் தமாக்கா அடிக்கும் SK!

தீபாவளிக்கு வரும் அயலான்... சுதந்திர தினத்தில் மாவீரன்! டபுள் தமாக்கா அடிக்கும் SK!
X
பிரின்ஸ் படத்தால் போதுமென்ற அளவுக்கு வாங்கிக் கட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன் அதற்கும் சேர்த்து இந்த ஆண்டு இரண்டு படங்களின் மூலம் விருந்து படைக்க காத்திருக்கிறார். அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் இரண்டு படங்களை இந்த ஆண்டு ரிலீசுக்காக தன் வசம் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

பிரின்ஸ் படத்தால் போதுமென்ற அளவுக்கு வாங்கிக் கட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன் அதற்கும் சேர்த்து இந்த ஆண்டு இரண்டு படங்களின் மூலம் விருந்து படைக்க காத்திருக்கிறார். அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் இரண்டு படங்களை இந்த ஆண்டு ரிலீசுக்காக தன் வசம் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒன்று மாவீரன் இன்னொன்று அயலான். | sivakarthikeyan upcoming movies 2023


மடோன் அஸ்வின் இயக்கத்தில் புதிதாக உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தின் மூலம் அறிமுகமான அஸ்வின் அந்த படத்துக்காக தேசிய விருதும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது படமாக உருவாகி வரும் மாவீரன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. சாந்தி டாக்கீஸ் பேனரில் அருண் விஸ்வா தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசை பரத் சங்கர். இந்த படத்தை தமிழகம் முழுக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. | Sivakarthikeyan maaveeran release date

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏற்கனவே தயாரிப்பில் இருந்த படம் அயலான். கிராபிக்ஸ் காட்சிகளுக்காக தாமதமான நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளார சிவகார்த்திகேயன். இந்த வருடம் தீபாவளித் திருநாளில் இந்த படத்தை வெளிக்கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். அந்த வகையில் வரும் நவம்பர் 10ம் தேதி இந்த படத்தை திரைக்கு கொண்டு வருவார்கள் என தெரிகிறது. | Ayalaan release date


இப்படி சிவகார்த்திகேயன் இந்த வருடத்திலேயே இரண்டு படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை மேலும் விரிவு செய்ய திட்டமிட்டுள்ளார். அயலான் படத்தில் ஏற்கனவே ஏ ஆர் ரஹ்மான் இசையில் அட்டகாசமான ஒரு பாடல் வெளியாகி ஹிட் ஆகியிருந்தது. மாவீரன் படத்திலும் ஒரு பாடல் வெறித்தனமாக ஹிட் ஆகி வருகிறது. இதனால் இரண்டு படங்களின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. | maaveeran sivakarthikeyan music director

இதுமட்டுமின்றி அயலான் படத்தின் இயக்குநர் ரவிக்குமாரின் முந்தைய படமான இன்று நேற்று நாளை படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனால் அந்த படத்துக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது தமிழில் வெளியாகவுள்ள முதல் ஏலியன் படம் என்பதாலும் ரசிகர்கள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிக அதிகமாக வைத்திருக்கிறார்கள். | alien sivakarthikeyan movie


சிவகார்த்திகேயன் மாவீரன் மற்றும் அயலான் என இரண்டு சூப்பர் ஹிட் இயக்குநர்களின் படங்களை ஒரே வருடத்தில் இறக்கி தனக்கான மார்க்கெட்டை நிலை நிறுத்த திட்டமிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமியின் புதிய படம் ஒன்றிலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். | sivakarthikeyan kamal haasan movie

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு