விரைவில் அயலான் 2..! சிவகார்த்திகேயனே சொன்ன தகவல்..!

விரைவில் அயலான் 2..! சிவகார்த்திகேயனே சொன்ன தகவல்..!
விரைவில் அயலான் 2..! சிவகார்த்திகேயனே சொன்ன தகவல்..!

அயலான் படத்தின் விமர்சனங்களை ஏற்று அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக செய்வோம் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து முன்னணி நடிகருக்கான இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். எம்ஜிஆர், ரஜினி, விஜய் வரிசையில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்று பல நடிகர்களுக்கும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள சிவகார்த்திகேயன் தற்போது அயலான் திரைப்படத்தை களமிறக்கியுள்ளார்.

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் இணைந்துள்ள அயலான் திரைப்படம் பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து ஒரு வழியாக இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகியுள்ளது.

பொங்கல் ரிலீசாக வெளியான `அயலான்' திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், படத்தின் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ரவிக்குமார், திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமா திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர்.

ரசிகர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன், "புதுவிதமான திரைப்படத்தை மக்கள் மத்தியில் கொடுக்க வேண்டும் என ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்தோம். எதிர்பார்த்தது போல் படத்தை கொடுத்திருப்பதாக நினைக்கிறேன்.

"இந்த படத்தில் சில குறைகள் இருந்திருக்கலாம். அதை ஏற்றுக்கொண்டு, அயலான் 2 படத்தில் இன்னும் சிறப்பாக செய்வோம். இந்த படத்தின் கைதட்டல்களை ரவிக்குமாரின் தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன்" என்றார்.

இயக்குனர் ரவிக்குமார் பேசுகையில், "அயலான் படம் எங்கள் அனைவரின் கடின உழைப்பால் உருவானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி " என்றார்.

ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் ரவிக்குமாருக்கு பூங்கொத்துகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனால் அயலான் 2 படமும் உருவாகும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு பிடித்தமான நடிகராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது இளைஞர்களுக்கும் பிடித்த நடிகராக மாறியுள்ளார். இன்னும் 10 ஆண்டுகளில் அவர் ரஜினிகாந்தின் இடத்தில் இருப்பார் என்று கணிக்கப்பட்டு வருகிறது

சிலரிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அயலான் திரைப்படம் குழந்தைகளுக்கு பிடித்த படமாக நல்ல விமர்சனத்தையும் பெற்றிருப்பதால் வசூல் ரீதியாக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கவலைகளை மறந்து ஃபேண்டஸி உலகில் நம்மை பிரம்மிக்கச் செய்திருக்கிறார் இயக்குநர். இதனால் குழந்தைகள் பலரும் படத்தைக் காண விரும்புகின்றனர். இதனாலேயே படத்தை திரையிட்ட பல திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அயலான் படத்தின் வசூல் 50 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரமும் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்பதால் இந்த படம் நிச்சயம் 100 கோடியைத் தொடும் என்கிறார்கள்.

இந்த வசூல் சாதனை குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அயலான் படத்தின் வெற்றிக்கு சிவகார்த்திகேயன், ரவிக்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் பாராட்டப்படுகிறார்கள்.

அயலான் திரைப்படம், சிவகார்த்திகேயனின் 20-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மூலம் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங்குடன் முதல் முறையாக இணைந்தார். அடுத்ததாக இந்த படத்தின் இயக்குநர் நடிகர் சூர்யாவுடன் இணையவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story