புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிலீசாகும் அவதார்: பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Avatar 2 Movie in Tamil
Avatar 2 Movie in Tamil-அவதார் முதல் பாகம் வரும் செப்டம்பர் 23-ம் தேதி மீண்டும் திரைக்கு வர உள்ளது. வாஷிங்டன், ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு 'அவதார்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தை கொடுக்கும் வகையில் புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்து அவதார் படத்தை கேம்ஸ் கேமரூன் உருவாக்கி இருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்த பாகங்களை உருவாக்க உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். அதன் தயாரிப்பு பணிகள் இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் அவதார் 2-ம் பாகம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
Avatar 2 trailer in tamil-இந்நிலையில் அவதார் 1-ம் பாகத்தை மீண்டும் திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டது. அதன்படி வரும் செப்டம்பர் 23-ந்தேதி அவதார் முதல் பாகம் மீண்டும் திரைக்கு வர உள்ளது. இது தொடர்பான போஸ்டர்களை வெளியிட்டுள்ள படக்குழு, இந்த படம் ஐமேக்ஸ், டால்பி வசதியுடன் திரைக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu