நடிகர் விஜய்சேதுபதியை தாக்க முயற்சி? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

நடிகர் விஜய்சேதுபதியை தாக்க முயற்சி? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
X

விஜய் சேதுபதி

பிரபல நடிகர் விஜய் சேதுபதி மீது, பெங்களூரு விமான நிலையத்தில், ஒருவர் தாக்க முயன்ற வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவர், இன்று பெங்களூரு விமான நிலையத்தில் சென்று கொண்டிருந்தார். அவருடன் பாதுகாப்பு படை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில் விஜய் சேதுபதியின் பின்னால் வந்த நபர் ஒருவர், திடீரென எட்டி உதைத்து விஜய் சேதுபதியை தாக்க முற்பட்டார். எனினும் பாதுகாப்பு படையினர் இம்முயற்சியை தடுத்து நிறுத்தினர். அந்தநபர் யார் என்ற முழு விவரம் கிடைக்கவில்லை.


விஜய் சேதுபதியைத் தாக்க முயன்ற நபரை விமான நிலையத் தொழில் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரித்து வருகின்றார்கள். இச்சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஒருசிலர், இது ஒருவேளை சினிமா ஷூட்டிங் ஆக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் கிளப்பினர். இதுபற்றி விஜய் சேதுபதி தரப்பை அணுகிய போது, அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.

Tags

Next Story
ai healthcare technology