ஜவான் பட வாய்ப்பை நிராகரித்த முன்னணி நடிகர்

பைல் படம்.
Atlee latest news-சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவர் கடந்த 2014ம் ஆண்டு ஆர்யா-நயன்தாரா நடிப்பில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதன் வெற்றி தான் அடுத்ததாக விஜய்யை வைத்து ‘தெறி’ இயக்கும் சூப்பரான வாய்ப்பை அட்லிக்கு வழங்கியது.
"தெறி" ஹிட்டானதும் அட்லிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘மெர்சல், பிகில்’ என விஜய்யை வைத்து மாஸான இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு தான் அது. ‘பிகில்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கி வரும் புதிய படம் ‘ஜவான்’. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார்.
இப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் மும்பை மற்றும் சென்னை என மாறி மாறி நடத்தப்பட்டது. தற்போது படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூனை இந்த படத்தில் நடிக்க வைக்க நடிகர் ஷாருக்கான் அட்லீயுடன் இணைந்து நேரில் வந்து கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அல்லு அர்ஜூன் இந்த வாய்ப்பை வேண்டாம் என நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த செய்திதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu