விஜயுடன் மோத தயாரான அட்லீ ?

விஜயுடன் மோத தயாரான அட்லீ ?
X

நடிகர் விஜய்க்கு காட்சிகளை விளக்குகிறார் டைரக்டர் அட்லீ.  (பைல் படம்)

Jawan and leo movie clash-தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று முறை விஜய்யுடன் இணைந்து மாபெரும் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ.

Jawan and leo movie clash-விஜய் - 'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் 'ஜவான்' படம் வருகிற ஜுன் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அதாவது, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் பிசியாக இருந்து வருவதால் ' ஜவான்' படத்தில் நடிக்க போதுமான கால்ஷீட் கொடுக்கமுடியாமல் போய்விட்டதாகவும் இதனால் படப்பிடிப்பு முடிவடைய சிறிது நாட்கள் எடுக்கும் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படமும் அக்டோபர் மாதம் ஆயுதப்பூஜை விடுமுறை நாட்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டடிருந்தது. இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் ஜவான் பட ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அட்லீயும், விஜயும் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விஜய்-அட்லீ கூட்டணி இதுவரை தோல்வியைத் தழுவியதே இல்லை. தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று முறை விஜய்யுடன் இணைந்து மாபெரும் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. எப்போது மேடை ஏறினாலும், என்னுடைய அண்ணன் என்னுடைய தளபதி விஜய் என்று கூறிவிடுவார் இயக்குனர் அட்லீ. அந்த அளவிற்கு விஜய்யுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.

இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் தான் விஜய்யின் லியோ திரைப்படமும் வெளியாகவுள்ளது. ஒருவேளை இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகவும் வாய்ப்புகள் அதிகம் என கிசுகிசுக்கப்படுகிறது. தன்னுடைய அண்ணன் விஜய் என்று கூறிவிட்டு நேருக்கு நேர் விஜய்யுடன் மோத அட்லீ முடிவெடுத்துவிட்டாரா என கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

Tags

Next Story
ai solutions for small business