தளபதியின் தம்பி நான்.. கண்டிப்பா அத செஞ்சே ஆகணும்! - அட்லீ
சென்னையில் பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்ற “ஜவான்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லி தனது அண்ணன் தளபதி விஜய் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜவான். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தில் விஜய் கேமியோ இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் அட்லீ மிகவும் நெகிழ்ச்சியுடன் விஜய்யை புகழ்ந்து பேசினார்.
கடைசியாக ரசிகர்கள் எல்லாரையும் பிகில் இசை வெளியீட்டு விழாவில் இதே இடத்தில் பார்த்ததாக கூறிய அட்லீ, வீர முத்துவேல் சார் படிச்ச இதே இடத்துல தான் ஈவென்ட் நடத்தணும்னு முடிவு பண்ணியதாகவும் கூறினார். இந்தப் படம் நடக்க முக்கிய காரணம் என்னோட அண்ணன் என்று கூறிவிட்ட கொஞ்சம் கேப் விட, ரசிகர்கள் குதூகலத்தில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்... பின் தொடர்ந்த அட்லீ, என்னோட தளபதி, விஜய் சார்தான்.
விஜய் தன்னிடம் இப்படி கூறியதாக தெரிவித்த அவர்‘என்ன பண்ணுவன்னு தெரியாது இந்த படம் நீ பண்ணனும்’னு விஜய் அண்ணா சொன்னாரு என்று தெரிவித்தார். நான் பிகில் ஷூட்டிங் போகும் போது ஷாருக்கான் ‘உன்ன பார்க்கணும்’னு சொன்னாங்க. நான் நம்பவே இல்ல.. பொய் சொல்றாங்கன்னு நினச்சேன். ஆனா அப்றம் எல்லாம் நடந்தது.
எந்திரன் படப்பிடிப்பின்போது ஷங்கரிடம் உதவி இயக்கநராக இருந்த அட்லீ, ஷாருக்கான் வீட்டு கதவின் அருகில் புகைப்படம் எடுத்த நினைவுகளைப் பகிர்ந்தார். மீண்டும் எனக்காக அதே கதவு திறந்துச்சு. ‘வெல்கம் அட்லி சார்’ னு என்னைய ஷாருக் வெல்கம் பண்ணினாரு என்று ஷாருக்கான் குறித்தும் பேசியிருந்தார்.
நான் 6 மாசத்துல படம் பண்ணி, 7வது மாசம் ரிலீஸ் பண்ணிடுவேன். இது எல்லாமே தளபதியாலதான். இந்த படம் நடக்கும் போது கோவிட் வந்துருச்சு. நம்ம தளபதியோட பேன், சொன்ன சொல்ல காப்பாத்தணும் என்று தன் கொள்கை குறித்தும் பேசினார்.
மேடையில் விஜய் சேதுபதி குறித்து பேசிய அட்லீ, அவர் மாதிரி வேற யாரும் பண்ண மாட்டாங்க. அவங்களுக்கு அந்த தைரியமில்ல. ஷாருக்கான் சாருக்காக ‘சிங்கமே’ன்னு ஒரு பாட்டு பண்ணி கொடுத்தாரு. இந்தில அந்த பாட்டோட பேரு தெரில. எனக்கு இந்தி தெரியாது. என்று பேசி அரசியலும் லைட்டாக தொட்டு பார்த்தார்.
இந்த படத்துல 13 பாட்டு இருக்கு என்ற அப்டேட்டையும் கொடுத்திருக்கிறார் அட்லீ. யோகி பாபுவ எல்லாரும் டேட் தரமாற்றாங்கன்னு சொல்றாங்க. அவரு பல உதவி இயக்குநரோட நலனுக்காக பல விஷயங்கள் பண்றாரு என்று சில உண்மைகளையும் போட்டு உடைத்தார்.
அட்லியின் பேச்சு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. விஜய்யும் அட்லியின் திறமைகளைப் பாராட்டி வந்துள்ளார். இருவரும் இணைந்து உருவாக்கிய “பிகில்” படம் தமிழ் சினிமாவில் சாதனை படைத்தது. அட்லியின் “ஜவான்” படமும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu