படப்பிடிப்பில் விபத்து: காயத்துடன் பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பில் விபத்து: காயத்துடன் பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி
X

நடிகர் ஆசிப் அலி.

சினிமா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில், பிரபல நடிகர் காயமடைந்து, திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த பிரபலமான நடிகர் ஆசிப் அலி. இவர், இந்தியன் ரூபி, சால்ட் & பெப்பர், பேச்சிலர் பார்ட்டி, ரெட் ஒயின் உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, நிஷாந்த் சட்டு இயக்கத்தில், 'எ ரஞ்சித் சினிமா' என்ற மலையாள படத்தில், ஆசிப் அலி நடித்து வருகிறார். இப்படத்தில், சைஜு குரூப், அன்சன் பால், நமிதா பிரமோத் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள், திருவனந்தபுரம் அருகே நடைபெற்று வந்தது. இன்று காலை, வழக்கம் போல் படப்பிடிப்பு நடைபெற்றபோது, எதிர்பாராதவிதமாக விபத்து நடைபெற்றது. இதில், நடிகர் ஆசிப் அலி படுகாயமடைந்தார். காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், படப்பிடிப்பை ரத்து செய்தனர். இச்சம்பவம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அசிப் அலி நன்றாக இருப்பதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்