அசோக்செல்வனுக்கு திருமணம்... பொண்ணு இவங்கதானாம்!
Ashok Selvan Marriage
Ashok Selvan Marriage-தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் அசோக் செல்வன். இவர் கடந்த 2013ம் ஆண்டு சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமைதியான முகம், அலட்டிக் கொள்ளாத நடிப்பு என அசோக்செல்வன் எதிர்த்த வீட்டு பையன் ரோலுக்கும் பொருத்தமாக இருப்பார் பணக்கார கெட்டப்புக்கும் பொருத்தமாக இருப்பார். இப்படி இவர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என பல படங்கள் கடந்த ஆண்டில் வெளியானது. பல படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியைத் தழுவியது என்றே சொல்லலாம். ஆனாலும் புது முயற்சியைக் கைவிடாமல் செய்து கொண்டே இருக்கிறார்.
இவர் தற்போது நெஞ்சமெல்லாம் காதல் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் பிரபல தயாரிப்பாளரின் மகளுக்கும் காதல் இருப்பது தற்போது கோலிவுட்டில் பரபர பேச்சாக இருக்கிறது. இதுகுறித்த சினிமா வட்டாரத்திலிருந்து வந்த தகவலின்படி, விரைவில் இவர்களின் காதல் திருமணத்தில் கைகூடும் என்று கூறப்படுகிறது.
இருவரும் தங்கள் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணப் பேச்சுவார்த்தையைத் துவக்கிவிட்டனராம். மிக விரைவில் திருமண தேதி குறிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu