யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!

யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!
X
Ashok Selvan Married-அசோக் செல்வனின் காதல் மனைவியாகப் போகும் பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் அசோக் செல்வன். இவர் கடந்த 2013ம் ஆண்டு சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தற்போது நெஞ்சமெல்லாம் காதல் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் பிரபல தயாரிப்பாளரின் மகளுக்கும் காதல் இருப்பது தற்போது கோலிவுட்டில் பரபர பேச்சாக இருக்கிறது. இதுகுறித்த சினிமா வட்டாரத்திலிருந்து வந்த தகவலின்படி, விரைவில் இவர்களின் காதல் திருமணத்தில் கைகூடும் என்று கூறப்படுகிறது.

இருவரும் தங்கள் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணப் பேச்சுவார்த்தையைத் துவக்கிவிட்டனராம். மிக விரைவில் திருமண தேதி குறிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இவரின் ஆரம்பமே அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் இளம் வயது பில்லாவாக நடித்ததுதான். பின்னர்தான் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பீட்சா 2 படத்தில் நாயகனாக நடித்து புகழ் பெற்றவர், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நல்ல நடிப்பு திறனை வெளிப்படுத்தினார். சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என பல படங்களில் நடித்திருக்கிறார் அசோக் செல்வன்.

கடந்த சில மாதங்களாக இவருக்கும் சூப்பர் சிங்கர் பிரகதிக்கும் இடையில் ஏதோ இருப்பதாக கிசுகிசு பேச்சு எழுந்து வருகிறது. இருவரும் காதலிப்பதாக சொல்லப்பட்டாலும் அது உண்மை இல்லை என்றும் சிலர் கூறிவருகின்றனர். இவர்களுக்கு நெருக்கமான நண்பர்களே இது காதல் இல்லை அவர்கள் நட்பில் இருக்கிறார்கள் என்று கூறுவதால் இதில் உண்மை இருக்கலாம்.

அதேநேரம் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனைக் காதலிப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது அவர்களே சொன்னால் மட்டுமே வெளியில் வரும். ஆனாலும் இது நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து வெளியான தகவல் என்பதால் ஒதுக்கிவிடவும் முடியாது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!