முப்பதாண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் அரவிந்த்சாமி..!

முப்பதாண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் அரவிந்த்சாமி..!
X

ரஜினிகாந்த்- அரவிந்தசாமி

நடிகர் அரவிந்த்சாமி சுமார் 30 ஆண்டுகளுக்குப்பிறகு, நடிகர் ரஜினிகாந்த்தின் 170-வது படத்தில் அவரோடு நடிக்கவிருக்கிறார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த்துடன் 1991-ம் ஆண்டு 'தளபதி' படத்தில் அவருடன் எதிர் கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகர் அரவிந்த்சாமி. அதன்பிறகு, சற்றேறக்குறைய முப்பதாண்டுகள் கடந்தநிலையில் மீண்டும் ரஜினியுடன் அவரது 170-வது படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய நடிகர் அரவிந்த்சாமி, "நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். தற்போது, தனது 169-வது படமான 'ஜெயிலர்' படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த், அவரது 170-வது படத்துக்கான பேச்சுவார்த்தைகளையும் இப்போதே நடத்தி வருகிறார். எனவே, அந்தப் படத்தில்தான் அரவிந்த்சாமி இணைந்து நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள்.

அதோடு, ரஜினியின் 170-வது படத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'டான்' படத்தை இயக்கிய இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story