அருவி சீரியல் நடிகைக்கு 44 வயதில் திருமணம்!

அருவி சீரியல் நடிகைக்கு 44 வயதில் திருமணம்!
X
44 வயதான நடிகை லாவண்யாவுக்கு இப்போது திருமணம் நடந்துள்ளது. திருப்பதியில் நடந்த இவரது திருமணத்துக்கு அருவி சீரியல் குழுவினர் சென்று கலந்துகொண்டுள்ளனர்.

சூர்ய வம்சம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை லாவண்யா, தற்போது அருவி தொடரில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 44 வயதில் திருமணம் ஆகியிருக்கிறது.


படையப்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் வாங்கியிருப்பார் லாவண்யா. இதன்பிறகும் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தெனாலி படத்தில் ராஜ் டிவி தொகுப்பாளராக வந்து பேட்டி காண்பார். அந்த காட்சியில் கமல்ஹாசன் பர்பாமன்ஸை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு ஒரு நொடி இவரது அழுகையையும் காண்பிப்பார்கள். பின் பல படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வரவில்லை.


தற்போது சீரியல்களில் நடித்து வரும் லாவண்யா, சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி தொடரில் மூத்த மருமகளாக நடித்து வருகிறார். இவரது கணவர் இவரையும் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு இன்னொருத்தியுடன் காதல் செய்து கொண்டிருப்பதாக கதை தொடர்ந்துகொண்டிருக்கிறது.


44 வயதான நடிகை லாவண்யாவுக்கு இப்போது திருமணம் நடந்துள்ளது. திருப்பதியில் நடந்த இவரது திருமணத்துக்கு அருவி சீரியல் குழுவினர் சென்று கலந்துகொண்டுள்ளனர்.



Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!