/* */

சூர்யாவின் படத்தில் டப்பிங் தொடங்கிய அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய்

சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்தில் அறிமுகமாகும், அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் தனது டப்பிங்கை தொடங்கினார் !

HIGHLIGHTS

சூர்யாவின் படத்தில் டப்பிங் தொடங்கிய அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய்
X

அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய்

சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்தில் அறிமுகமாகும், அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் தனது டப்பிங்கை தொடங்கினார் !


கலையுலகில் மூன்று தலைமுறையாக ஒரு குடும்பம் நடிப்பில், பாரம்பரியமாக ஜொலிப்பது, மிகப்பெரும் சாதனை. நடிகர் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் இப்போது அவர்களது, தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையில் ஆர்ணவ் விஜய் வரை நடிப்பு அக்குடும்பத்தில் மரபாக, அழகாக வளர்க்கப்படுகிறது. 2D Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்தில், தாத்தா-தந்தை-மகன் மூவரும் திரையில் இணைந்து நடிக்கும் செய்தி, ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஆர்ணவ் விஜய் இன்று தனது காட்சிகளுக்கான, டப்பிங் பணிகளை செய்யத் தொடங்கினார். இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இயக்குநர் சரவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், குழந்தைகளை மையப்படுத்தி, 100% குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. மொத்த படக்குழுவும் இப்படம் உலக ரசிகர்கள் ரசிக்கும் படியான படமாகவும், மன அழுத்தத்தை நீக்கும், பொழுதுபோக்கு திரைப்படமாகவும் இருக்குமென உறுதியாக நம்புகிறது.

இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் ஊட்டியை சுற்றிய பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Films யின் S.R.ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா (இசை), கோபிநாத் (ஒளிப்பதிவு), மேகா (எடிட்டிங்), மைக்கேல் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), வினோதினி பாண்டியன் (உடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.






Updated On: 31 July 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!