முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு... ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் திருமண வரவேற்பு..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு...  ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் திருமண வரவேற்பு..!
X

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டு திருமண வரவேற்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் - இசைக் கலைஞர் ரியாஸ்தீன் ஷேக் முகம்மதுவுக்கும் கடந்த மே மாதம் ஆறாம் தேதி நபிகள் நாயகம் வழிகாட்டியபடி எளிமையான முறையில் திருமணம் நிகழ்ந்தது. இந்தத் திருமணப் புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் அப்போது தனது ட்விட்டர் பக்கத்திலும் இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றி இருந்தார். அதற்கு, ஏராளமானோர் அப்பதிவுகளுக்கான பின்னூட்டத்தில் வாழ்த்துகள் மொழிந்து மகிழ்ந்தனர்.

அதன்பிறகு, திருமண வரவேற்பு நிகழ்ச்சி உடனடியாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் இடைவிடாத பல்வேறு பணிகளில் பரபரப்பாக நேரமின்றி இயங்கி வந்ததால், திருமண வரவேற்பு நிகழ்வை உடனடியாக நடத்தப்படவில்லை.

இந்தநிலையில், 10/06/2022 அன்று மாலை செங்கல்பட்டு மாவட்டம், ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் - ரியாஸ்தீன் ஷேக் முகம்மது ஆகியோரது திருமண வரவேற்பு இனிதே நிகழ்ந்தது. இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். அதோடு, திருமணத் தம்பதிகளுக்கு மரக்கன்று அடங்கிய பசுமைக்கூடையை பரிசாக வழங்கினார்.

அத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி என தனது குடும்பத்தினருடன் மணமக்கள் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தினர் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!