என் உழைப்பின் ஆதரவு ஏ.ஆர்.ரஹ்மான்... இயக்குநர் ஆர்.பார்த்திபன் பெருமிதம்..!

என் உழைப்பின் ஆதரவு ஏ.ஆர்.ரஹ்மான்... இயக்குநர் ஆர்.பார்த்திபன் பெருமிதம்..!
X

'இரவின் நிழல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இயக்குநர் ஆர்.பார்த்திபன்.

'இரவின் நிழல்' படத்துக்காக எனக்கு பலமான ஆதரவு, ஏ.ஆர்.ரஹ்மான் என்று பெருமிதப்படுகிறார் இயக்குநர் ஆர்.பார்த்திபன்.

இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் ராதாகிருஷ்ணன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் முப்பதாண்டுகால இசைப் பயணத்தின் கொண்டாட்டமும் சென்னையில் நடந்தது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இயக்குநர் ஆர்.பார்த்திபன் ராதாகிருஷ்ணன், ''ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டியது அவசியம். நான் இந்த விழாவுக்கு பல நண்பர்களை அழைத்திருந்தேன். ஆனால், நேரம் கிடைக்கவில்லை என்பதுதான் அவர்களது பதிலாக இருந்தது. ஆனாலும், பாலிவுட்டிலிருந்து நண்பர் அபிஷேக் பச்சன் வந்து சிறப்பித்துள்ளார். நான் அவரை வைத்து ஒரே ஒரு திரைப்படத்தைத்தான் இயக்கியுள்ளேன். ஆயினும், இந்த நிகழ்வுக்காக அவர் வந்து சிறப்பித்துள்ளார். சினிமா எடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால், பெரிய ஆர்வம் இருக்கு. பொதுவாக, சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத விஷயத்தைச் செய்ய வேண்டும். அப்போதுதான் சினிமாவின் சரித்திரத்தில் நான் இடம்பெற முடியும் என்ற பேராசை எனக்குள் இருக்கிறது.

அதனைடிப்படையில்தான், வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறேன். அவ்வகையில், 'இரவின் நிழல்' ஒரு நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படம். இந்தப் படம் பற்றி, நான் ஒரு கர்வத்தோடு சொல்வதற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பில் எனக்கு மிகப்பெரிய ஆதரவு தேவைப்பட்டது. அந்த ஆதரவை அளித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்'' என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!