பொன்னியின் செல்வன் 2 ஆடியோ வெளியீடு: இசை கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர். ரகுமான்

பைல் படம்.
ஐந்து பாகங்கள் கொண்ட கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக மணிரத்னம் இயக்கியிருந்தார். முதல் பாகம் உலக அளவில் கடந்த வருடம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிசில் ரூ.400 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து அக நக பாடல் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இது வந்தியத் தேவன் - குந்தவைக்கு இடையேயான பாடலாக அமைந்துள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய நடிகை சுஹாசினி, மணிரத்னம் இயக்கிய காதல் காட்சிகளில் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் - குந்தவை இடையேயான காதல் காட்சி தான் தனது ஃபேவரைட் எனவும் இரண்டாம் பாகத்தில் அந்த காட்சி பெரும் வரவேற்பு பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பிற பாடல்கள் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது. இவ்விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பேசியதாவது: கடந்த 31 ஆண்டுகளாக நான் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அவர் மிகப்பெரிய அறிவாளி. அவருடைய கற்பனைக்கு என் இசை மூலம் உயிர் கொடுப்பதை பெருமையாக கருதுகிறேன். இவ்வாறு தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 ல் பணியாற்றிய பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள், பின்னணி பாடியவர்கள் என அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu