வரவேற்பை பெற்றுள்ள ரஜினியின் 'அண்ணாத்த' டிரைலர்!

வரவேற்பை பெற்றுள்ள ரஜினியின் அண்ணாத்த டிரைலர்!
X

அண்ணத்த படத்தில் ஒரு காட்சி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என நடிகர் பட்டாளமே நடித்துள்ள திரைப்படம்தான் அண்ணாத்த. இப்படத்தின் முதல் பாடல், இம்மாதம் 4ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து மற்ற பாடல்களும் வெளியாயின.

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு, கிராமத்து பின்னணியில் கதைக்களம் உள்ள நிலையில், இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும், தாளம் போட வைக்கும் வகையில் அமைந்துள்ளன. 'அண்ணாத்த அண்ணாத்த', 'சாரல் காற்றே', 'மருதாணி', 'வா சாமி' ஆகிய பாடல்களும், படத்தின் டீசரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்த சூழலில், இன்று மாலை படத்தின் டிரெய்லர் வெளியானது. இன்னைக்கு ஆரம்பிக்குது திருவிழா என, அட்டகாசமாக முழங்குகிறது டிரெய்லர். படத்தில், ரஜினியின் பெயர் காளையன், சூரைக்கோட்டை ஊராட்சித் தலைவர் என்பது தெரியப்படுத்தி உள்ளனர். வழக்கம் போல் ஸ்டைல், கலக்கல் டான்ஸ், கெத்தான நடை, அதிரடி சண்டை என, ரஜினியிசம் கொஞ்சமும் குறையவில்லை. சமூக வலைதளத்தில் ரசிகர்கள், டிரெய்லர் வெளியீட்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!