கிராமத்தான குணமாதான பார்த்திருக்க.. தெறிக்கவிடும் 'அண்ணாத்த' டீசர்

கிராமத்தான குணமாதான பார்த்திருக்க.. தெறிக்கவிடும் அண்ணாத்த டீசர்
X

‘‘அண்ணாத்த’’ பட டீஸரின் முதல் காட்சி.

நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் வரும் 4ம் தேதி தீபாவளியன்று வௌியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீஸர் அக்டோபர் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று டீஸரை வெளியிட்டுள்ளனர்.

இந்த டீஸரில் ''கிராமத்தான குணமாத்தானே பாத்திருக்க, கோபப்பட்டு பார்த்ததில்லையே'' என ரஜினிகாந்த் கூறும் வசனத்துடன் தொடங்கிறது. மேலும், ''காட்டாறு அவனுக்கு கரையும் கிடையாது, தடையும் கிடையாது'' என ரவுடிகளை அடித்து நொறுக்கும் காட்சி அமைந்துள்ளது தீபாவளிக்கு தரமானது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்ணாத்த படத்தின் டீசர் டுவீட்டரில் வெளியான 1 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

ஏற்கெனவே மறைந்த எஸ்பிபி பாடிய டைட்டில் பாடல் வெளியாகி ரசிகர்களை கிரங்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!