வெளியானது 'அண்ணாத்த' படத்தின் 3வது பாடல்: சமூகவலைதளங்களில் டிரெண்டிங்

வெளியானது  அண்ணாத்த படத்தின் 3வது பாடல்: சமூகவலைதளங்களில் டிரெண்டிங்
X
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தின் 3-வது பாடலான 'மருதாணி', சற்று முன்பு வெளியாகி, இணையதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், 'அண்ணத்த'. டி. இமான் இசை அமைந்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் தீபாவளிக்கு, இப்படம் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் முதல் பாடலாக, கவிஞர் விவேகா எழுதி, மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப் ரமணியம் பாடிய, 'அண்ணாத்த அண்ணாத்த' என்ற பாடல் வெளியானது. அதை தொடர்ந்து, 'சாரல் காற்றே' என்ற , ரொமான்ஸ் பாடல் வெளியானது. இவை, ரஜினி ரசிகர்களை கடந்து பரவலாக வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், 'அண்ணாத்த'படத்தின் 3வது பாடல் சற்று முன்பு வெளியானது. மணி அமுதவன் எழுதியுள்ள 'மருதாணி' என்ற பாடலை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நாகாஷ் ஆஸிஸ், ஆண்டனி தாஸன், வந்தனா சீனிவாசன் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!