Anna Serial update ஊருக்கு வர மறுக்கும் பரணி! திருமண ஏற்பாடு செய்யும் அப்பா!

அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் | Anna serial zee tamil today episode youtube 25 May 2023
விரைவில் அப்டேட் செய்யப்படும்
அண்ணா சீரியல் நேற்றைய எபிசோட் | Anna serial zee tamil Yesterday episode youtube 24 May 2023
ஜோதிடர் சண்முகத்துக்குதான் முதலில் கல்யாணம் நடக்கும் என்று சொல்கிறார். அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நாயகியான பரணி அறிமுகமாகிறார். பரணி ஒரு டாக்டராக அறிமுகமாகும்போது அவர் அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தையை சமாதானம் செய்துகொண்டிருக்கிறார்.
டாக்டருக்கு படிக்கும் ஒவ்வொருவரும் அவங்க ஊர்ல ஒரு வருசம் பயிற்சி எடுக்கணும் ஆனா நீங்க என்னன்னா உங்க சொந்த ஊருக்கு போகமாட்டேன் என்கிறீங்க என்று கேட்கிறார். அதற்கு அங்குதான் என் அப்பா இருக்கிறார் அதனால் போகமாட்டேன் என்று கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து பரணியின் அப்பா சவுந்திர பாண்டி பொம்பளைங்க நைட்ல நம்மள பாத்துக்கணும் பகல்ல புள்ளைங்கள பாத்துக்கணும் அவளுக வேலை அவ்வளவுதான் என ஆணவத்தோட ஆணாதிக்க மனப்பான்மை பேசுகிறார். அதோடு பஞ்சாயத்தில் ஒருவர் தங்கள் மகள் ஓடி போய்விட்டதாக சொல்ல பொட்டப்புள்ளைங்கள அடக்கி வளக்கணும் பாசம் காட்டி வளத்தா இப்படித்தான் ஓடி போவாளுக எங்க இருந்தாலும் அவள தேடி புடிச்சி கொன்னுடு, மத்தத நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறான்.
பரணியின் அம்மா பாக்கியம் பயந்து போய் ஒளிந்து நின்று ஜன்னல் வழியாக பார்க்கிறாள். அவளை வெளியே அழைத்து பொம்பள புள்ளைங்கள படிக்க கூடாதுனு சொல்றான் ஆனா பெத்த பொண்ண டாக்டருக்கு படிக்க வச்சிருக்கான்னு பாக்கறயா. அது என்னோட கௌரவம் அதுக்காக மட்டும்தான் படிக்க வச்சேன். அப்றம் விகேஎஸ் பாத்திரக்கடை ஓனர் மகனுக்கு உம்பொண்ண கட்டி குடுக்குறதா வாக்கு கொடுத்துருக்கேன். அவள வரச்சொல்லு என்கிறான். அதற்கு பதில் சொல்ல வாய் திறந்த பாக்கியத்தை எதிர்த்து பேசாம சொன்னத மட்டும் செய்யி என்று சத்தம் போடுகிறான்.
சண்முகம் வீட்டில் கந்தசஷ்டி பாடிக்கொண்டே சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறான். தங்கைகள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்ல புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இசக்கி எல்லாருக்கும் தனித்தனியாக சாப்பாடு செய்து கொடுத்து ஒழுங்கா சாப்பிடணும் என செல்லமாக மிரட்டுகிறாள். அப்போது ஒரே ஒரு அண்ணன வச்சிட்டு நாங்க படுற பாடு இருக்கே என தங்கைகள் புலம்புகின்றனர்.
சண்முகம் பூஜை அறையில் இருக்கும் 5 உண்டியல்களில் ஒவ்வொன்றாக பணம் போட்டுக் கொண்டே வருகிறான். முதல் தங்கை முதல் கடைசி தங்கை வரை போட்டுவிட்டு தனக்கு போடாமல் மீண்டும் தங்கைகளின் உண்டியலிலேயே பணத்தைப் போடுகிறார்.
ஒவ்வொரு தங்கையாக அழைத்துச் சென்று விட்டுவிட்டு பசங்க கூட பேசக்கூடாது என்று சொல்லி அனுப்புகிறான். அந்த நேரத்தில் ரத்னாவுக்கு யாரோ ஒரு இளைஞன் லவ் லெட்டர் கொடுத்ததாக தெரியவர சண்முகம் கோபத்துடன் சண்டைக்கு செல்கிறான். இதனால் அடுத்த எபிசோடில் என்ன நடக்குமோ என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அண்ணா சீரியல் நாளைய எபிசோட் | Anna serial zee tamil tomorrow episode youtube 26 May 2023
இன்னமும் கதாநாயகி அறிமுகம் ஆகவில்லை என்பதால் இரண்டாவது நாள் கதாநாயகி அறிமுகம் ஆகும் காட்சி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu