அனிருத்தின் லேட்டஸ்ட் போட்டோ வைரல்

அனிருத் (பைல் படம்)
3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் இசையமைப்பாளர் அனிருத் . ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த அந்தப் படத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சுமாரான வரவேற்பைப் பெற்றாலும் அந்தப் படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன.
குறிப்பாக, அனிருத் இசையமைத்து தனுஷ் பாடியிருந்த ஒய் திஸ் கொலவெறி உலக அளவில் ஹிட்டாகி ட்ரெண்டானது. இதனால் முதல் படத்திலேயே அனிருத் அனைவராலும் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறிவிட்டார்.
டாப் இசையமைப்பாளரான அனிருத் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார். ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்களின் படங்கள் அனைத்திலும் அனிருத்தே இடம்பெற ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆட்டோவில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும், அனிருத் ரஜினிகாந்த்தின் வெறித்தனமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இந்தப் புகைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu