விரைவில் இசை நிகழ்ச்சி நடத்த அனிருத் ரெடி

விரைவில் இசை நிகழ்ச்சி நடத்த அனிருத் ரெடி
X

இசையமைப்பாளர் அனிருத்

Anirudh Anirudh -சினிமாவில், இசைத்துறைக்குள் வந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத், இசை நிகழ்ச்சி நடத்த தயாராகி வருகிறார்.

Anirudh Anirudh -ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய '3' படம் மூலம் இளம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தொடர்ந்து 'வணக்கம் சென்னை', 'கத்தி', 'மாரி', 'விவேகம்', 'பேட்ட', 'மாஸ்டர்', 'விக்ரம்' உட்பட பல்வேறு படங்களுக்கு, துள்ளலான இசை அமைத்துள்ளார்.


இவர் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், அதை கொண்டாடும் விதமாக, 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் : ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருடன் இணைந்து, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சென்னை, கோயம்புத்தூரில் இந்நிகழ்ச்சி நடக்க உள்ளது. சென்னை நிகழ்ச்சி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரலையாகவும், ஒளிபரப்பப்பட இருக்கிறது. நிகழ்ச்சி நடக்கும் தேதிகள் அதிகாரபூர்வமாக, பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!