ஹீரோயினாக அறிமுகமாகும் குழந்தை நட்சத்திரம் அனிகா

நடிகை அனிகா (பைல் படம்).
Anikha surendran heroine-மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமான அனிகா தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு தமிழில் தொடர்ந்து 'விஸ்வாசம்', 'மாமனிதன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் 'கண்ணானே கண்ணே' பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனையடுத்தது குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா தற்போது கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். மலையாளத்தில் 'ஆஷ் ட்ரீ வென்ச்சர்ஸ்' தயாரிப்பில் ஆல்ஃப்ரெட் சாமுவேல் இயக்கத்தில் உருவாகும் 'ஓ மை டார்லிங்' படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் மெல்வின் ஜி பாபு, முகேஷ், லீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள அனிகாவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu