அந்தகன் பட பாடல்கள் விரைவில் வெளியீடு!

X
அந்தகன் பட பாடல்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் திரைப்பட பாடல்கள் வரும் ஜூலை 24ம் தேதி மீண்டும் வெளியிடப்படுகிறது. அந்தகன் படத்தை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட இருப்பதால் படக்குழு புரமோசன்களில் தீவிரமாகியுள்ளது.

இந்த பாடலை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறாராம். தி கோட் பட ஷூட்டிங்கின் போது விஜய் மற்றும் பிரசாந்த் ஆகியோருக்கு இடையில் இருந்த நட்பு இன்னும் பலமாகியுள்ளது. இதனால் அந்த நட்பின் அடிப்படையில் விஜய்யிடம் இதுகுறித்து கேட்க, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விஜய் வெளியிட இந்த பாடல் ஜூலை 24ம் தேதி முதல் உலகம் எங்கும் ஒலிக்கப்போகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த பாடல் சிறப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Tags

Next Story
future ai robot technology