காஃபி வித் கரணில் கிசுகிசுக்களைப் பகிர்ந்த அனன்யா..!

காஃபி வித் கரணில் கிசுகிசுக்களைப் பகிர்ந்த அனன்யா..!
X

அனன்யா, விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா (பைல் படம்)

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சி ட்ரெண்டில் இப்போது விஜய் தேவரகொண்டா, அனன்யா, ராஷ்மிகா மந்தனா!

பாலிவுட் இயக்குநரான கரண் ஜோஹர் நடத்தும் காஃபி வித் கரண் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஒரு நிகழ்ச்சி. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் சீசன் 7-ன் 4-வது எபிசோடில் அனன்யா பாண்டே மற்றும் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டாவது தென்னிந்திய நட்சத்திரம் விஜய் தேவரகொண்டா. இந்த வார நிகழ்ச்சியில், அனன்யா மற்றும் விஜய் இருவரும் நிறைய கிசுகிசுக்களைப் பகிர்ந்து கொண்டனர் என்பதுதான் ஹாட் நியூஸ் .

அந்த நிகழ்ச்சியின்போது அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையேயான தொடர்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாமல், மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். விஜய் தேவரகொண்டா யாருடன் டேட்டிங் செய்கிறார் என்று அனன்யாவிடம் கரண் ஜோஹர் கேள்வி எழுப்பியபோது, ​​​​அவர் விஜய்யைப் பற்றி கூறி மறைமுகமாக ராஷ்மிகா மந்தனாவை பற்றி போட்டுடைத்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' போன்ற படங்களில் நடித்தபோது, அவர்களது காதல் காட்சிகள் மற்றும் லவ் கெமிஸ்ட்ரி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்பது இத்தருணத்தில் கோடிட்டு கவனங்கொள்ளத்தக்கது எனலாம். அதுவே, இவர்கள் காதல் வதந்தியில் சிக்கிக்கொள்ளக் காரணமாகவும் இருந்தது. இருவருமே 'வெறும் நண்பர்கள்' என்று கூறிக்கொண்டாலும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இருவரும் சுற்றுலாவிற்கு ஒரே இடங்களுக்கு சென்றது போன்றவை எல்லாம் இவர்களது காதல் வதந்தி குறித்து வெளியான தகவல்களை வலுக்கச் செய்தது.

Tags

Next Story